பிந்திய செய்திகள்

  • கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

நாட்டின் கல்வி துறையில் நான்கு ஆண்டுகளில் பாரியளவில் சேவை செய்ய முடிந்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டல் அதற்கு பக்கபலமாக இருந்ததாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இலங்கையின் இரண்டாவது மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலையாக நிர்மாணிக்கப்படவுள்ள தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மீரிகமயில் இன்று (20) அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டின் சிறார்களின் பெருமளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் நடடிவக்கைகளின் முக்கியமான செயற்பாடாக இது அமைந்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் 1,142 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. 12 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன  

இங்கு கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்

தேசிய பாடசாலைகளின் இடை நிலைய வகுப்புக்களுக்கு மாணவர் வெற்றிடங்கள் 45,000 இருப்பதை நாம் இனங்கண்டுள்ளோம்.  தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் 15,000 வெற்றிடங்கள் உள்ளன. இதன்படி குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக முதற்கட்டமாக நேர்முகப் பரீட்சைகளில் தெரிவான 4000 மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு அடுத்த வாரம் இணைத்துக்கொள்ளவுள்ளோம்.

நகர பாடசாலைகளில் மாணவர்களுக்கு காணப்படும் இட நெருக்கடிகளை குறைத்து நகர பாடசாலைகளில் காணப்படும் அனைத்து வசதிகளையும் கிராமிய பாடசாலைகளுக்கும் வழங்குவதற்காக அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை ஆரம்பித்ததுடன் அந்த திட்டத்தின் கீழ் புதிய தேசிய பாடசாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தேன் என்றார்.

இலங்கையின் இரண்டாவது மும்மொழியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலையாக மினுவன்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட மீரிகம, பஸ்யாலயில்  1,142 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (20) நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த நிகழ்வுக்கு கலந்து கொள்ளவுள்ளார். இந்த பாடசாலை 12 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் திறன் வகுப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் பாடசாலை கட்டடங்கள் 500 மாணவர்களிடம் கையளித்த நாளில் சிஷ்யோதா விசேட மறறும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகமும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சேவை

இலங்கையின் இரண்டாவது மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலையாக நிர்மாணிக்கப்படவுள்ள தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மீரிகமயில் இன்று (20) அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டின் சிறார்களின் பெருமளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் நடடிவக்கைகளின் முக்கியமான செயற்பாடாக இது அமைந்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் 1,142 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. 12 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் முதற்தடவையாக தேசிய பாடசாலைகளில் காணப்படும் இடைநிலை வகுப்புகளுக்கான வெற்றிடங்களை பகிரங்கப்படுத்தியமையின் ஊடாக 44,568 மாணவர்களுக்கு தேசிய பாடசாலைகளில் இணைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது...

கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம்

கடந்த ஆட்சி காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டப்பட்ட போதும் அதற்கான நிர்மாணப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கல்விக்காக வரலாற்றில் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவிலான நிதி முதலீடு செய்து பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை நாட்டின் பாடசாலை கட்டமைப்பிற்கு அர்ப்பணிப்பு செய்வதற்கு பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆதரவும் வழிகாட்டலுமே பிரதான காரணமாகும் என கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி துறையின் புரட்சிகரமான செயற்பாடுகளில் புதிய அத்தியாத்தினை ஏற்படுத்தும் வகையில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக புதிய பாடசாலை கட்டடங்கள் 500 ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (09) கஹதுடுவ ,வெனிவெல்கொல சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகத்தில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் பாடசாலை கட்டடங்கள் 500 மாணவர்களிடம் கையளித்த இன்றைய நாளில் சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகம் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
 
இங்கு கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கல்விக்காக அதிகளவிலான நிதி முதலீட்டை செய்தது தற்போதைய அரசாங்கமாகும். அதனை கட்சி பேதங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அரசாங்கம் விசேட தலையீடு செய்துள்ளதாகவும் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகம் அதன் வெற்றிகரத்தின் பிரதிபலனாகும் என்றார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் இன்று திறந்து வைக்கப்பட்ட 500 பாடசாலை கட்டடங்களுக்காக 10,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராமிய பாடசாலைகளுக்கு அனைத்து வசதிகளும் வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 9.064 பாடசாலைகளில் 18,000 அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்கான மொத்த முதலீடு 65,000 மில்லியன் ரூபாவாகும்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சார் வேலைத்திட்டங்களை இன்னும் 10 வருடங்களுக்கு முன்னெடுத்து செல்ல முடியுமாயின் நாட்டில் சிறந்த கல்வி முறைமை உருவாகும். இந்த சவாலை பொறுப்பேற்று கல்வி அபிவிருத்தியின் வளர்ச்சிக்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
அவர்கள் முன்னெடுக்கும் அர்ப்பணிப்பையும் முயற்சியையும் பாராட்டுகின்றேன். அத்துடன் பாடசாலை கட்டமைப்பை பௌதீக வளங்களினால் பூரணப்படுத்தி மனித வளங்களுடன்  அபிவிருத்தி செய்வதற்கு அதிகளவில் கவனம் செலுத்தியது தற்போதைய அரசாங்கமாகும்.

எதிர்காலத்தில் பாடசாலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே  இருக்க வேண்டும். வாகனத்தை செலுத்துவதற்கு  சாரதி அனுமதிப்பத்திரம் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.அதேபோன்று வகுப்பறையை பொறுப்பேற்கும் ஆசிரியர்கள் பயிற்சியுடன் கூடிய ஆசிரியராக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.  பயிற்சிபெற்ற ஆசிரியர்களை கட்டமைப்புக்கு இணைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.20 ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்ட கல்வி 21 நூற்றாண்டில் வாழும் மாணவர்களுக்கு பொறுந்தாது.எனவே எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் கல்வியை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

குளியாபிட்டிய மத்திய கல்லூரியில் புதிய நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம், பற் சிகிச்சை நிலையம், உள்ளக விளையாட்டரங்கை திறந்து வைத்தல் மற்றும் மூன்று மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவா று தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சி எம்மிடல் இல்லை. ஜனாதிபதி வேறு கட்சி, மாகாண சபை அதிகாரங்களும் வேறு கட்சியிடம், இவ்வாறு இருக்கும் நிலைமையிலேயே பாரியளவிலான வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் என்னுடைய எண்ணக்கருவில் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும். நான் பாடசாலைக்கு நடந்தே கல்வி பயில சென்றுள்ளேன்.இதன்படிதான் நகரத்திலுள்ள பாடசாலைகளில் உள்ள வசதிகளை கிராமத்திலுள்ள பாடசாலைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்ததிட்டத்தை ஆரம்பித்தேன். அதிகாரங்கள் போதியளவு இல்லாத போதும் கல்வி துறையை கட்டியெழுப்புவதற்காக நான்கு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளேன் என்றார்.

கல்வியியற் கல்லூரிகளுக்கு போதனா கல்வி பாடநெறியை பயில்வதற்காக விண்ணப்பதாரிகளில் தகைமையுடைய 8000 பேர் எதிர்வரும் 25 திகதி இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பாரிகளை அறிவுறுத்த கல்வி அமைச்சு நடடிவக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய 19 கல்வியியற் கல்லூரிகளுக்கு 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக இரு மாணவ குழுக்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதன்பிரகாரம் 2018;2020 கல்வியாண்டுக்கு 2016 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரமும், 2019:2021 கல்வியாண்டுக்கு 2017 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் இணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம்

கடந்த ஆட்சி காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டப்பட்ட போதும் அதற்கான நிர்மாணப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கல்விக்காக வரலாற்றில் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவிலான நிதி முதலீடு செய்து பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை நாட்டின் பாடசாலை கட்டமைப்பிற்கு அர்ப்பணிப்பு செய்வதற்கு பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆதரவும் வழிகாட்டலுமே பிரதான காரணமாகும் என கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி துறையின் புரட்சிகரமான செயற்பாடுகளில் புதிய அத்தியாத்தினை ஏற்படுத்தும் வகையில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக புதிய பாடசாலை கட்டடங்கள் 500 ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (09) கஹதுடுவ ,வெனிவெல்கொல சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகத்தில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் பாடசாலை கட்டடங்கள் 500 மாணவர்களிடம் கையளித்த இன்றைய நாளில் சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகம் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
 
இங்கு கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கல்விக்காக அதிகளவிலான நிதி முதலீட்டை செய்தது தற்போதைய அரசாங்கமாகும். அதனை கட்சி பேதங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அரசாங்கம் விசேட தலையீடு செய்துள்ளதாகவும் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட சிஷ்யோதா விசேட மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகம் அதன் வெற்றிகரத்தின் பிரதிபலனாகும் என்றார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் இன்று திறந்து வைக்கப்பட்ட 500 பாடசாலை கட்டடங்களுக்காக 10,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராமிய பாடசாலைகளுக்கு அனைத்து வசதிகளும் வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 9.064 பாடசாலைகளில் 18,000 அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்கான மொத்த முதலீடு 65,000 மில்லியன் ரூபாவாகும்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சார் வேலைத்திட்டங்களை இன்னும் 10 வருடங்களுக்கு முன்னெடுத்து செல்ல முடியுமாயின் நாட்டில் சிறந்த கல்வி முறைமை உருவாகும். இந்த சவாலை பொறுப்பேற்று கல்வி அபிவிருத்தியின் வளர்ச்சிக்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
அவர்கள் முன்னெடுக்கும் அர்ப்பணிப்பையும் முயற்சியையும் பாராட்டுகின்றேன். அத்துடன் பாடசாலை கட்டமைப்பை பௌதீக வளங்களினால் பூரணப்படுத்தி மனித வளங்களுடன்  அபிவிருத்தி செய்வதற்கு அதிகளவில் கவனம் செலுத்தியது தற்போதைய அரசாங்கமாகும்.

எதிர்காலத்தில் பாடசாலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே  இருக்க வேண்டும். வாகனத்தை செலுத்துவதற்கு  சாரதி அனுமதிப்பத்திரம் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.அதேபோன்று வகுப்பறையை பொறுப்பேற்கும் ஆசிரியர்கள் பயிற்சியுடன் கூடிய ஆசிரியராக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.  பயிற்சிபெற்ற ஆசிரியர்களை கட்டமைப்புக்கு இணைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.20 ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்ட கல்வி 21 நூற்றாண்டில் வாழும் மாணவர்களுக்கு பொறுந்தாது.எனவே எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் கல்வியை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு மாடிக் கட்டடத்தை கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் இன்று(19) மாணவர்களிடம் கையளித்தார்.

-கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம்

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்ததின் நிர்மாணி பணிகளில் ஏதாவது முரண்பாடுகள், ஊழல் மற்றும் மோசடிகள், தரமற்ற நிர்மாண பணிகள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் கல்வி அமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் பிரதான செயற்திட்ட பொறியிலாளருக்கு குறித்த முறைப்பாட்டை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் பிரதான செயற்திட்ட பொறியிலாளரின் 0112786768 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டோ அல்லது பிரதான செயற்திட்ட பொறியிலாளர், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்ட அலுவலகம், 7 ஆம் மாடி ,இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு குறித்த முறைப்பாட்டை அனுப்பி வைக்க முடியும்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டமானது 65,000 மில்லியன் ரூபா செலவில் 18,000 செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் ஊடாக 9064 பாடசாலைகள் பயனடைகின்றன. இதன் ஊடாக பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக 950 புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

Search