பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்க முடிந்தமை நாம் பெற்றுக்கொண்ட  வரலாற்று வெற்றியாகும்

அச்சிடுக
கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம்
கல்வி துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்க பெற்றமை வரலாற்று வெற்றியாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
டெப் கணிணி வழங்கும் முதலாம் கட்டமாக தேசிய பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் டெப் கணிணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வெகு விரைவில் பாடசாலை கட்டமைப்புக்குள் டெப் கணிணியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கல்வியல் கல்லூரிகளில் கல்வி போதனா ஆசிரியர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.