ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக நிதி அமைச்சின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளேன்

அச்சிடுக
-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக நிதி அமைச்சின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று(10) வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு பீ.சி பெரேராவின் சம்பள தொடர்பான அறிக்கையில் இருந்து உருவானது. இந்த முரண்பாடு ஏனைய சேவைகளுடனும் தொடர்புப்பட்டுள்ளதால் இந்த விடயத்தில் கல்வி அமைச்சினால் தனி தீர்மானம் எடுக்க முடியாது. 
எனினும் ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு எவ்வாறாக இருந்தாலும் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை பன்மடங்காக அதிகரித்துள்ளோம் என்றார்.