அதிபர்கள் 1918 பேர் புதிதாக கல்வி கட்டமைப்புக்கு...

அச்சிடுக

 


புதிய அதிபர் சேவை யாப்பின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் மூன்றாம் வகுப்புக்கான அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய அதிபர்களை கல்வி கட்டமைப்பில் அவசரமாக இணைத்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் இதன் பிரகாரம் அதற்கான நேர்முக பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வரை அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் வகுப்புக்கான அதிபர்கள் வெற்றிடங்கள் 1918 ஆக காணப்பட்டதுடன் அதற்கான நேர்முக பரீட்சை ஜுலை மாதம் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதிபர்களை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டி பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றோர்களில் வெற்றிடங்கள் உள்ள எண்ணிக்கைக்கும் அதிகமான தொகையினர் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது நேர்முக பரீட்சைக்கான கடிதம் தகுதியானோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அப்பால் நேர்முக பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டோரின் பெயர் பட்டடியலை கல்வி அமைச்சின் www.moe.gov.lk     இணையத்தளத்திற்கு சென்று பார்க்க முடியும். அத்துடன் நேர்முக பரீட்சை நடத்தும் திகதி மற்றும் நேரம் நாளை (19) முதல் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.