13 வருட கட்டாய கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தர தொழில் பாடத்துறையை தேர்ந்தெடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நாளாந்தம்  500 ரூபா கொடுப்பனவு

அச்சிடுக

கல்வி கட்டமைப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 13 வருட கட்டாய கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் உயர் தரத்திற்கு தொழில் பாடத்துறை தேர்ந்தெடுத்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பெறும் காலம் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்தும் முகமாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2017 ஆம் தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டமாகும்.

எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற மனித வளத்தை பாடசாலையில் இருந்து உருவாக்கும் நோக்குடன் உயர்தர மாணவர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் பாடத்துறையின் கீழ் 13 வருட சான்றுப்படுத்தப்பட்ட கல்வியை பயில்வதற்காக மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.க.பொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும் தொழல் பாடத்துறையின் கீழ் உயர்தரம் வரை செல்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பொருட்படுத்தாமல் நாளை உலகுக்கு ஏற்ற தொழில் துறைக்கான  26 பாடநெறிகளில் விரும்பிய 3 பாடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சிறுவர் உளவியல், உடற்கல்வி மற்றும் விளையாட்டு,கால்நடை உற்பத்தி தொழில்நுட்பம், உணவு உற்பத்தி திட்டமிடல் தொழில்நுட்பம், நிர்மாணத்துறை தொழில்நுட்ப கல்வி, மின் மற்றும் மின்னனு தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தினர் உபசரிப்பு, அழகு கலை உட்பட 26 பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கள மொழியை போன்று தமிழ் மொழியிலும் தொழில் பாடத்துறை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது தமிழ் மொழி மூலம் 106 பாடசாலைகளில் தொழில் பாடத்துறைக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

13 வருட கட்டாய கல்வியின் கீழ் 310 பாடசாலைகளில் வெற்றிகரமாக தொழில் பாடத்துறை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.தொழில் பாடத்துறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2 வருட பயிற்சியின் பின்னர் என்.வி.கியு 4 சான்றிதழ் வழங்கப்படும்.அதன்பின்னர் மாணவர்கள் பல்கலைகழங்களில் உயர் மட்டம் வரை சென்று கல்வி பயில முடியும். மேலும் குறித்த பாடத்துறைக்காக வெளிநாடுகளுக்கு சென்று கல்வி முன்னெடுக்கவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுப்படவும் முடியும்.இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பாடத்துறையை பயிற்றுவிப்பதற்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளவும் பாடசாலைகளில் திறன் வகுப்பறையுடன் கூடிய அனைத்து வசதிகளையும் பாடசாலைகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.