சுரக்சா காப்புறுதி திட்டத்தின் ஊடாக தற்போதைக்கு 777 மில்லியன் ரூபா காப்பீடு செலுத்தப்பட்டு விட்டது.

அச்சிடுக


இலங்கையின் அனைத்து பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையின் கீழ் அமுல்ப்படுத்தப்படும் சுரக்சா காப்புறுதி திட்டத்தின் ஊடாக தற்போதைக்கு (2018-12-01 முதல் 2019-07-29 வரை) 17,308 மாணவர்கள் செய்த விண்ணப்பத்திற்கு அமைவாக 777 மில்லியன் ரூபா காப்பீடு முழுமையாக செலுத்தப்பட்டு விட்டது. 

அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் சுரக்சா காப்புறுதியின் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும். ஐந்து வயது தொடக்கம் 21 வயது வரையான மாணவர்களுக்கு உரித்தாகும் .

இதன்பிரகாரம் சுரக்சா காப்புறுதியானது, மருத்துவ காப்புறுதி, விபத்து காப்புறுதி மற்றும் ஆயுட காப்புறுதி என மூன்று பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

மருத்துவ காப்புறுதி பிரிவின் கீழ் அரச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்படுவதாயின் ஒரு நாளைக்கு 3000 ரூபா  உள்ளடங்களாக ஆண்டுக்கு 200,000 ரூபா காப்பீட்டினை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு 20,000 ரூபா காப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நோய், சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள் ஆகியவைகளை குறித்த காப்பீட்டின் கீழ் பெற முடியும். அத்துடன் அனைத்து தேவைகளை அடிப்படையாக கொண்டு தீவிர மற்றும் நீடித்த நோய் காப்பீடாக 200,000 ரூபாவுக்கும் அதிகமான தொகையை பெற்றுக்கொள்ள முடியும். (மருத்துவ பதிவுகளுக்கு உட்பட்டது).

விபத்து காப்புறுதி பிரிவின் கீழ் விபத்து அல்லது கடுமையான நோயினால் நிரந்தரமாக அங்கவீனமுற்றோருக்காக ஆண்டொன்றிற்கு 200,000 ரூபா காப்பீடுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் விபத்து அல்லது கடுமையான நோயினால் பகுதியளவு அங்கவீனமுற்றோருக்காக 150,000 ,200,000 ரூபா அளவிலான காப்பீடு தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இயற்கையாகவோ அல்லது விபத்தின் காரணமாக மரணித்தால் 200,000 ரூபா காப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர் இருவர் குறித்த காப்புறுதிக்கு உள்ளடக்கப்படுவர். ஒரு குடும்பத்தில் பெற்றோர் மரணிக்கும் பட்சத்தில் சுரக்சா காப்புறுதி அந்த குடும்பத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைக்கும். அத்துடன் மாணவர் ஒருவர் மரணித்தால் பெற்றோருக்கு குறித்த மாணவரின் இறுதி சடங்கிற்காக 150,000 ரூபா காப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். 

சுரக்சா காப்புறுதி பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் போது செய்ய வேண்டியது, 0112369369 அல்லது 0113641555 என்ற இலக்கத்திற்கே தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் அலியான்ஸ் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் கிளைகள் அல்லது வலய கல்வி திணைக்களத்தில் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 2018 டிசம்பர் மாதம் 01 முதல் கடந்த காலத்திற்கான காப்பீடுகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க முடியும். 

இது தொடர்பான மேலதிக தொடர்புகளை றறற.அழந.பழஎ.டம என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் அல்லது பாடசாலை சுகாதார மற்றும் போசனை கிளை, கல்வி அமைச்சு, இசுறுபாய ,பத்தரமுல்லை என்ற முகவரியில் அல்லது முகாமையாளர், சுரக்சா காப்புறுதி, அலியான்ஸ் இன்சுரன்ஸ் லங்கா லிமிடட் நிறுவனம், இல- 46 கீழ் 10 , நவம் மாவத்த, கொழும்பு 02 என்ற முகவரிக்கு பெற்றுக்கொள்ள முடியும்.