பிந்திய செய்திகள்

செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பாடசாலை விஞ்ஞான பாடத்திட்டத்தில் மாற்றம்.

நவீன உலகிற்கு ஏற்ற ,புதிய அறிவு மற்றும் திறமைகளுடன் முன்னேற்றம் காணும் திறமையான மாணவர்களை கல்வியின்  ஊடாக உருவாக்கும் வகையில் பாடசாலை பாடப் பரப்பை தயாரிப்பதற்கு சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
இதன்பிரகாரம் 2023 வருடத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பாடத்திட்ட திருத்தங்களின் கீழ் பாடசாலை விஞ்ஞான பாடப்பரப்பில் தற்போது இருந்த முறைமைக்கு பதிலாக பரிசோதணைகளை அடிப்படையாக கொண்ட விஞ்ஞான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Search