பிந்திய செய்திகள்

29,000 மாணவர்களுக்கு 1,340 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான காப்பீட்டு  தொகை வழங்கப்பட்டு விட்டது.

சுரக்சா காப்புறுதி திட்டத்தின் பிரதிபலன்கள் வேகமாக மாணவர்கள் வசமாகிறது...

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள்,பிரிவெனாவில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காக கல்வி அமைச்சின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட சுரக்சா மாணவர் காப்புறுதி திட்டத்தின் பயன்கள் வேகமாக மாணவர்கள் வசமாகி வருகின்றன .2018 டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் சுரக்சா மாணவர் காப்புறுதியை  வழங்குவதற்காக கல்வி அமைச்சுடன் அலியான்ஸ் நிறுவனம் கைகோர்த்தது. 

சுரக்சா காப்புறுதியின் ஊடாக 5-21 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சுகாதார காப்புறுதி, விபத்து காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி ஆகியவைக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சுக்கு கிடைத்த புதிய புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம் 1,340 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை காப்பீடாக மாணவர்களுக்கு முழுமையாக செலுத்தப்பட்டு விட்டது.  இதுவரையான காலப்பகுதியில் காப்பீட்டுக்காக 29,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Search