வேகமாக முன்னேறிவரும் உலகத்துடன் ஒன்றிணைந்து இந்நாட்டில் புதிய தொழில்நுட்ப அறிவினூடாக பலமிக்

அச்சிடுக

அணியினை உருவாக்குவதன் நோக்கமாக  கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அறிவூட்டுதல் மற்றும் வழிக்காட்டுதலுக்கமைய கல்வி அமைச்சில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முன்மாதிரி தேசிய தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரிக்காக 15 ஏக்கர் காணி குளியாப்பிட்டிய நாரங்கவில் அமைந்துள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

2017 ம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்டம் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவுசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு மற்றும் கொரிய குடியரசும் கொரியாவின் KOICA   நிறுவனத்தின் உதவியினூடாக குளியாப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரியின் கட்டுமான பணிக்கான மொத்த முதலீடு 1911 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.