2019 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதி வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து  

அச்சிடுக
2019 ஆம் ஆண்டில் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று (03) கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. கல்வி அமைச்சு சார்பாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அவர்களும் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சார்பாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேகா அலஸ் அவர்களும்; ஒப்பந்ததில் கைச்சாத்திட்டனர்.
2018 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 30 ஆம் திகதி வரை சுரக்ஷா காப்புறுதியை செலுத்துவதற்கு அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் ஒப்பந்ததின் ஊடாக இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சுரக்ஷா காப்புறுதி வழங்கும் போது கிடைத்த அனுபவம் மற்றும் இனங்காணப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அதிகளவிலான நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் இம்முறை சுரக்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சுரக்ஷா காப்புறுதியானது சுகாதார காப்புறுதி, அவசர விபத்து காப்புறுதி, வாழ்க்கை காப்புறுதி என மூன்று பிரிவுகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. சுகாதார காப்புறுதியின் ஊடாக தனியார் அல்லது அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு 200,000 ரூபாவும், வெளிவாரியாக சிகிச்சை பெறுவதற்கு 200,000 ரூபாவும், குணப்படுத்த முடியாத நோய்க்காக 200,000 ரூபா முதல் தேவைக்கேற்ப வகையில் பணம் பெற முடியும். (அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு நாள் ஒன்றுக்கு 3000ரூபா கிடைக்கும்). அவசர விபத்து காப்புறுதியின் கீழ் முழுமையான செயலிழப்புகளுக்கு 200,000 ரூபாவும், அரைவாசி செயலிழப்புகளுக்கு 150,000 முதல் 200,000 ரூபா வரை பெற முடியும். அத்துடன் வாழ்க்கை காப்புறுதி திட்டத்தின் கீழ் இயற்கை அல்லது அவசர விபத்துகள் ஆகிய இரண்டும் குறித்த திட்டத்தில் உள்ளடங்குவதுடன், பெற்றோர் உயிரிழப்பின் போது ஒருவருக்கு 200,000 ரூபாவும் மாணவர் உயிரிழக்கும் பட்சத்தில் 150,000 பணம் கிடைக்கும். குடும்பத்தில் பாடசாலைக்கு செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் பெற்றோர் உயிரிழக்கும் போது குறித்த சலுகை கிடைக்கும்.
அரச பாடசாலை மாணவர்களுக்கும் தனியார் பாடசாலை மாணவர்களுக்கும் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கும் பிரிவெனாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் அவரது சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சுரக்ஷா காப்புறுதி வழங்கப்படவுள்ளது. இதன்படி; 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான காப்புறுதி தொகை 45 இலட்சம் மாணவர்களுக்கும் கிடைக்கும். 2017 ஒக்டோபர் 01 முதல் சுரக்ஷா காப்புறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 011364155 அல்லது 0112369369 இலக்கத்தின் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.