பாதுகாப்பு பிரிவின் பூரண உடன்பாட்டை பெற்றதன் பின்னர் எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

அச்சிடுக

பாதுகாப்பு பிரிவின் பூரண உடன்பாட்டை பெற்றதன் பின்னர் எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 இன்று (02) அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாடசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக  18 விடயங்களை உள்ளடக்கிய விசேட சுற்றுநிருபமும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. முப்படைகளினதும் உளவு பிரவினதும் ஆலோசனைகளை செவிமடுத்த பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும். அதற்கும் மாற்றமாக எம்மால் எந்தவொரு தீர்மானமும் எடுக்க முடியாது.   பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது பாதுகாப்புடன் கூடிய இடமாக பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்துவதாகவும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என முப்படை பிரதானிகளிடம் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் கோரியுள்ளேன். மேலும் கத்தோலிக்க பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் பாதுகாப்பு பிரதானிகளுடனும் கர்தினால் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளேன் என்றார்