பிந்திய செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று நாம் தோற்கடிப்போம் என்று கூறி உரையை ஆரம்பித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் இன்று (11) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

இலங்கை பிரிவெனா கல்வியை கட்டியெழுப்புவதற்காக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட பிரிவெனா சட்டமூலத்தை திருத்துவதற்கு தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் நடவடிக்கை எடுததுள்ளார். 
சங்கபீடமும் பிரிவெனாதிபதிகளும் விடுத்த கோரிக்கைகளின் பிரகாரம் பிரிவெனா சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பிரிவெனா கல்வி சபையும் குறித்த திருத்தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது. 

ஹொரனை வித்தியாரத்ன கல்வியற் கல்லூரியின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் நேற்று (5) அடிக்கல் நடப்பட்ட போது.....

-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக நிதி அமைச்சின் அவதானத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று(10) வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு பீ.சி பெரேராவின் சம்பள தொடர்பான அறிக்கையில் இருந்து உருவானது. இந்த முரண்பாடு ஏனைய சேவைகளுடனும் தொடர்புப்பட்டுள்ளதால் இந்த விடயத்தில் கல்வி அமைச்சினால் தனி தீர்மானம் எடுக்க முடியாது. 
எனினும் ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு எவ்வாறாக இருந்தாலும் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை பன்மடங்காக அதிகரித்துள்ளோம் என்றார்.

பௌத்த தர்மத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு காரியங்களையும் திட்டங்களையும் செயற்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இலுக்ஹேன பேருவெவ சுதர்மாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூலகம், இரு மாடி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
விகாரை,பிரிவென் அபிவிருத்திக்காக அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களின் ஊடாக பல்வேறு காரியங்களை செய்துள்ளோம். இந்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 250 பாடசாலை கட்டடங்களை திறந்து வைக்கும் தேசிய நிகழ்வு கண்டி கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற போது கல்வியற் கல்லூரிக்கான மடிக்கணணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடனும் வழங்கப்பட்ட போது....

கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் ஆலோசனை

தேசிய பாடசாலைகளில் மூன்று வருடங்கள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு தங்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்குமாறு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் இன்று (10) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பல்லாயிர கணக்கான மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் பணிகளில் ஈடுப்படும் ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை தாம் பணிபுரியும் பாடசாலைகளில் எந்தவொரு முரண்பாடும் இன்றி  இணைத்துக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் முகமாக கல்வி அமைச்சர் குறித்த ஆலோசனையை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
1,5,6 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தவிர ஏனைய  இடைநிலை வகுப்புகளுக்கு மாத்திரமே இந்த தீர்மானம் செல்லுப்படியாகும்.

மனிதநேயம் தெரிந்த சிறுவர்களை உருவாக்குவதே தற்போது எமக்குள்ள பிரதான சவாலாகும் என கல்வி அமைச்சர் சட்டதரணி  அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் ஹொரன வித்தியாரத்ன கல்வியற் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல் தொழில்நுட்ப கட்டடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும்  உரையாற்றுகையில்,
நாட்டின் கல்வி கட்டமைப்பின் ஊடாக செயற்கையான உலகில் தனிப்பட்ட சிறுவர்களை அன்றி மனிதநேயம் தெரிந்து அதன்படி செயற்படுவோரையே உருவாக்க வேண்டும். அதுவே எமக்கு தற்போதுள்ள பாரிய சவாலாகும் என்றார்.

அகில விராஜ் காரியவசம் அமைச்சரான பிறகு நாட்டின் கல்வி துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை எம்மால் காண முடிகின்றது - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்படும் மூன்றாண்டு  கால போதனா கல்வி பாடநெறியை பயில்வதற்காக 2016 மற்றும் 2017 உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.
இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியற் கல்லூரிகளுக்கு 4000 மாணவர்கள் வீதம்  இரு குழுக்கள் (8000 மாணவர்கள்) சிங்களம் , தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் ஊடாக நடத்தப்படும் பாடநெறிகளுக்காக செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 
இதன்படி 2019.01.25 இலக்கம் 2108 சுற்றுநிருபத்தின் பிரகாரம் கல்வியற் கல்லூரி பாடநெறிகளுக்காக 68,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதுடன், அவர்களில் 28,000 பேர் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 
அத்துடன் 19 கல்வியற் கல்லூரிகளில் பாடநெறிகளை நிறைவு செய்த 4000 பேருக்கு ஒக்டோபர் மாதமளவில் ஆசிரிய நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு நான்கு ஆண்டுகளில் 20,064 பேர் ஆசிரிய சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இதன்படி 2015 இல் 5866 பேரும், 2016 இல் 5018 பேரும்,2017 இல் 5162 பேரும் ,2018 இல் 2186 பேரும் 2019 ஆம் ஆண்டில் இதுவரை 715 பேரும் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுவர்னவாஹிணி அலைவரிசையில் நேற்று (5) இரவு நடந்த ரது இற நிகழ்ச்சில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் பங்குபற்றினார். அந்த நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்(காணொளி இணைப்பு)

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

Search