பிந்திய செய்திகள்

இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி பயிலும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் சிறுவர் காப்பகங்களிலுள்ள சிறுவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் அண்மையில் சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதன்படி தேசிய பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் சிறுவர்களை ஏனைய மாணவர்களுடன் சமமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பிரகாரம் சிறுவர் காப்பகங்களில் பெற்றோர் இழந்து தவிக்கும் சிறுவர்களுக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு இணைந்து கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கும் வகையில் 2019-07-31 ஆம் திகதி 38:2019 இலக்க சுற்றறிக்கையின் ஊடாக அனைத்து தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

சிறுவர் காப்பகங்களிலுள்ள சிறுவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு இணைத்துக்கொள்ளும் போது சிறுவர் காப்பகத்தின் பொறுப்பாளரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பரிசிலனை செய்து கல்வி அமைச்சின் அனுமதியுடன் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக வெளியிடப்பட்ட 29:2019 சுற்றறிக்கையின் 4.5 சரத்தின் பிரகாரம் சிறுவர் காப்பகங்களிலுள்ள சிறுவர்களின் பொறுப்பாளராக அநாதை இல்ல பொறுப்பாளர் கருதப்படுவதுடன் முதலாம் வகுப்பு மாணவர்கள் இணைத்துக்கொள்வதற்காக விண்ணபிக்கும் பொறுப்பும் அநாதை இல்ல பொறுப்பாளரும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே சிறுவர் காப்பகங்களில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் சிறுவர்களின் எதிர்கால கல்வி விருத்திக்காக கிடைத்திருக்கும் வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்துமாறு அநாதை இல்ல பொறுப்பாளர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுகின்றது.

பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 

தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள புதிய கல்வி சட்டமூலத்தின் ஊடாக சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கண்காணிப்பு செய்யும் அதிகாரம் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச பாடசாலைகள் தற்போது நிறுவன சட்டமூலத்தில் அல்லது வர்த்தக நாம பதிவு செய்யும் கட்டளைகள் சட்டமூலத்தின் கீழ்  நிறுவனமாக அல்லது வர்த்தகமாக பதிவு செய்யப்படுவதனால் குறித்த பாடசாலைகள் தொடர்பாக சரியான தகவல்கள் கல்வி அமைச்சு வசம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோரினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படாமையினால் , குறித்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளல், கட்டணம் அறவிடல் ,கண்காணிப்பு  போன்ற விடயங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு கல்வி அமைச்சுக்கு அதிகாரம் இல்லை. இந்நிலையில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய கல்வி சட்டமூலத்தின் ஊடாக  இலங்கையின் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் உட்பட அனைத்து வகையான பாடசாலைகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளின் அதிகாரம் கல்வி அமைச்சின் கீழ்  உள்வாங்கப்படும். 

அத்துடன் மத்ரஸாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் முஸ்லிம் விவகார அமைச்சுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது என்றார்

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் 2012 ஆம் தொடக்கம் 2017 ஆம் வரை நடத்த பிராசின பண்டித பரீட்சையில் சித்திப்பெற்ற 375 பேருக்கான பட்டமளிப்பு விழா நேற்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நெலும் பொகுன அரங்கில் நடைபெற்றதுடன் இதன்போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு வித்வத் ஜன பிசாத விருது பட்டமளிக்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது.
 

நவீன உலகிற்கு ஏற்ற ,புதிய அறிவு மற்றும் திறமைகளுடன் முன்னேற்றம் காணும் திறமையான மாணவர்களை கல்வியின்  ஊடாக உருவாக்கும் வகையில் பாடசாலை பாடப் பரப்பை தயாரிப்பதற்கு சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
இதன்பிரகாரம் 2023 வருடத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பாடத்திட்ட திருத்தங்களின் கீழ் பாடசாலை விஞ்ஞான பாடப்பரப்பில் தற்போது இருந்த முறைமைக்கு பதிலாக பரிசோதணைகளை அடிப்படையாக கொண்ட விஞ்ஞான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம், கல்வி டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டமை, பாடசாலை கல்விக்கு புதிய சட்டமூலம், நூல்களாகிய தோழர்களே நேசமிக்க நண்பர்கள் என்ற மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் திட்டம்,உலக தேவைகேற்ற வகையில் பாடவிதானத்தை அபிவிருத்தி செய்தமை,அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், சுரக்சா காப்புறுதி திட்டம் அறிமுகம் செய்தமை,பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கல், மாணவர்களின் புதிய தயாரிப்புகளை ஊக்குவிக்க சுபக புலமைப்பரிசில் திட்டம்,பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் 3888 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டமை, கல்வி கட்டமைப்புக்கான வெற்றிடங்கள் நிரப்பலும் கொடுப்பனவுகள் அதிகரித்தமையும், மனித வள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்தியமை,பிரிவெனா கல்வியை மேம்படுத்தியமை, கொள்கை ரீதியான முக்கிய தீர்மானங்கள் எடுத்தமை போன்ற பாரிய அளவிலான திட்டங்களை கல்வி கட்டமைப்பில் நான்காண்டுகளாக முன்னெடுக்கப்பட்டன.

குளியாபிட்டியில் 23,593 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நாளை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை கையளிக்கப்படுவதுடன் மேலும் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளளன.
 
இதன்படி இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் தேசிய கல்வியற் கல்லூரி அடிக்கல் நடல் மற்றும் போதனா வைத்தியசாலையாக குளியாபிட்டிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அடிக்கல் நடப்படுவதுடன் குளியாபிட்டிய நகரின் சுரங்க பாதை, வடமேல் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடம் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் நாளை பிரதமரினால் திறந்து வைக்கப்படவுள்ளன.
 

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
 
13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பாடசாலை கல்வி முடிவதற்கு முன்னர் பிரபல நிறுவனங்களிடமிருந்து தற்போது தொழில் வாய்ப்புகளுக்கு கோரிக்கை வந்துள்ளதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
 
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் தொழிற்கல்விக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல ஆசிரிய வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் 226 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் பரகஹாதெனிய தேசிய பாடசாலையில் புதிய நிர்மாணிக்கப்பட்ட நிர்வாக கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடனும் நடைபெற்றது.

தேசிய கல்வி நிறுவகத்தில் பணிபுரியும் அலுவலக பணிகுழுவினருக்காக நிர்மாணிக்க உத்தேசித்துள்ள மூன்று மாடி வதிவிட கட்டடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (28) கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கல்வித் துறையின் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் வழிகாட்டலின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் தொழிற் கல்வி பாடநெறியின் கீழ் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கு பயிற்சிகாலம் முடியும் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக வங்கி புத்தகங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று (20) கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் திகம்பிட்டிய ஸ்ரீ பியரத்ன மஹா வித்தியாலயத்தின் இடைநிலை மற்றும் கனிஷ்ட பிரிவுகளுக்கான விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலும் கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் ஜே.சி அலவத்துவல அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

Search