பிந்திய செய்திகள்

பொதுஜன பெரமுன அரசியல் இலாபம் தேடும் அணுகுமுறை பற்றி விளக்கும் அமைச்சர்

ரிசாத் பதியுதீன் அவர்களின் கட்சியின் பிரதிநிதிகள் இருவரை இணைத்துக்கொண்டு குளியாப்பிட்டிய பிரதேச சபை அதிகாரத்தை கைப்பற்றிய பொதுஜன பெரமுன, அரசியல் இலாபத்திற்காக தற்போதைய அரசாங்கத்தில் ரிசாத் பதியுதீன் அமைச்சராக உள்ளமையை தேசத்துரோகமாக காட்ட முனைவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
குளியாப்பிட்டி நகர சபை மைதானத்தில் 2500 பேருக்கு சமுர்த்தி நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், 
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் குளியாபிட்டிய நகர சபையில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எம்மால் முடிந்த போதும் குளியாப்பிட்டி பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் போதுமான அளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் மொட்டு சின்னத்தை கொண்ட பொதுஜன பெரமுன கட்சியினர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கட்சி பிரதிநிதிகள் இருவரை இணைத்துக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றியது. அவ்வாறு நடக்காவிடின் குளியாபிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும். 
ரிசாத் பதியுதீன் அவர்களின் கட்சியின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றிய பொதுஜன பெரமுன கட்சியினர்; தற்போது அரசாங்கத்தில் அமைச்சராக ரிசாத் பதியுதீன் உள்ளமையை தேசத்துரோகமாகியுள்ளது.
அரசியல் அதிகாரத்திற்காக குறுகிய நோக்குடன் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பதாயின் அது வெட்கப்படதக்க செயலாகும். ஆத்துடன் கடந்த காலங்களின் போது தகுதியானவர்களுக்கு கிடைக்காத சமுர்த்தி கொடுப்பனவை தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கும் எமக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. 
அத்துடன் அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதுடன் தேசிய ஐக்கியத்தை சீர்குலைப்பதற்காக செயற்படுவோருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

Search