எம்மைப்பற்றி

akila_front4.jpg

இலங்கைத் தேசத்தின் சுதந்திரக் காற்றுக்காக தன்னை அற்பணிப்பு செய்த மகாமானிய டி.எஸ். சேனாநாயக்க அவர்களினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய பிரதிப் பொதுச் செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் இவர் செயற்படுகின்றார். 

ஐக்கிய தேசிய கட்சியின் இருதயத்தைப் போன்று நாட்டின் தொழிலாளர்களை கூட்டிணைக்கக் கூடிய தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவரும் இவராகும்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தற்போதைய கல்வி அமைச்சரும் இவராகும்.

அவர் அகில விராஜ் காரியவசம் எமது நேசம்மிக்க தலைவர்.

பல்கலைக்கழகப் பதிவாளராகவும் பிரபல வர்த்தகருமான கொடகே வில்லியம் காரியவசம் அவர்களுக்கும் திருமதி அலன் காரியவசம் அவர்களுக்கும் பிறந்த குடும்பத்தின் ஐந்தாவது பிள்ளை அகில விராஜ் காரியவசம், இவரது குடும்பத்தில் ஆறு சகோதர சகோதரிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது, இவர்களில் மூன்று பேர் சட்டத்தரணிகளாகும்.
 
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச தொடர்பாடல்கள் தொடர்பான பட்டத்தைப் பெற்ற இவர் உயர் கல்வியை அதனுடன் நிறுத்தி விடாது கொழும்பு திறந்த பல்கலைக்கழத்திற்குப் பிரவேசித்து தமது இரண்டாவது பட்டமான சட்டப் பட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். அவர் செயற்பாட்டு அரசியல் வாதியைப் போன்று சட்டத்தரணியுமாவார்.
 
இவரின் வாழ்க்கைத் துணைவி கண்டி மாவட்டத்தின் அரசியலுக்கு உரிமை கோரும் பி.எம். விஜயநாயக்க அவர்களினதும் திருமதி பிரேமலதா விஜயநாயக்க அவர்களினதும் அன்புப் புதல்வியான உத்தரா விஜயநாயக்க ஆகும். வர்த்தக முகாமைத்துவம் தொடர்பான பட்டதாரியான இவர் அன்று தொடக்கம் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் பலத்தை சேர்த்தவர். அகில - உத்தரா குடும்பம் ஒரு புதல்வியையும் ஒரு புதல்வனையும் உலகிற்குப் பெற்றெடுத்துள்ளனர்.
 
பரம்பரையாக அரசியலுக்கு உரிமை கோரும் குடும்பத்திலிருந்து வந்தமையினால் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு அரசியல் தொடர்பிலான அறிவு சிறு பராயத்திலிருந்தே கிடைத்தது. உயர் கல்வியைத் தொடரும் பருவத்திலும் செயற்பாட்டு அரசியலில் காலடி பதித்த இந்த இளைஞர் ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நாட்டின் இளைஞர்களை வலுவூட்டும் நோக்குடன் அக்காலத்தில் அறிமுகப்படுத்திய தேசிய இளைஞர் முன்னனியை உருவாக்கும் பணியின்போது அதன் முதலாவது சபைக் கூட்டத்தை குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடாத்த முடிந்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
 
1995 ஆம் ஆண்டில் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியின் தேசிய இளைஞர் முன்னனியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அகில விராஜ் காரியவசம் 1996 ஆம் ஆண்டு இளைஞர் முன்னனியின் குருநாகல் மாவட்டத் தலைவராகவும் அதற்குப் பின்னர் தேசிய இளைஞர் முன்னனியின் செயற்குழு சபையின் அங்கத்தவராகவும் நியமனம் பெற்றார். கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்ற காலப்பகுதியிலேயே இவர் இப்பதவிகளை வகித்தார்.
 
அத்துடன் தேசிய இளைஞர் முன்னனியில் அகில விராஜ் காரியவசம் அவர்கள் இளைஞர் தலைவராகவும் அதற்குப் பின்னர் 1999 ஆம் ஆண்டில் அதன் பிரதம செயலாளராகவும் தெரிவாகி செயற்பாட்டு அரசியலில் காலடி பதித்தார். 
 
பல்கலைக்கழக அரசியலில் முன்னின்று செயற்பட்ட இந்த இளம் தலைவர் பல்கலைக்கழக இளைஞர் முன்னனிக்கு தலைமைத்துவத்தையும் வழங்கினார். 1999 ஆம் ஆண்டில் அதிகாரத்திலிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்புகளுக்கு எதிராக நாடெங்கும் பாரிய மாணவர் பேராட்டங்களுக்கு உயிரூட்டி அதனை முன்னெடுத்தார்.
 
இதன்போது கைது செய்யப்பட்ட இந்த இளம் அரசியல்வாதி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் மூலம் தமது வாழ்வின் போராட்ட அரசியலுக்கு மேலும் அனுபவத்தைச் சேர்த்து அவர் 2001 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். தொகுதி அமைப்பாளர் பதவியைக் கூட வகிக்காத நிலையில் தனது 28 வயதிலேயே தேர்தலில் களமிறங்கினார்.
 
அதற்குப் பின்னர் 2003 ஆம் ஆண்டில் பண்டுவஸ்நுவர ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் பதவிக்கு நியமனம்பெற்ற அகில விராஜ் காரியவசம் அவர்கள் 2004 பாராளுமன்றத் தேர்தலில் 83,114 விருப்பு வாக்குக்களைப் பெற்று குருநாகல் மாவட்ட விருப்பு வாக்குப் பட்டியிலில் மூன்றாவது இடத்தைப் பெற்று பாராளுமன்றத்திற்குப் பிரவேசித்தார்.
 
2004 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை எதிர்கட்சிக்கு மீண்டும் தள்ளிய காலத்தை இவர் உற்சாகத்துடனும் பெரும் சவால்களையும் எதிர்கொண்டு எதிர்கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு இந்த இளம் தலைவன் அற்பணிப்புடன் செயற்பட்டார். ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலம் ஐக்கிய தேசிய கட்சியின் நிழல் அமைச்சரவையின் கல்வி விடயத்திற்குப் பொறுப்பான உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். நாட்டின் கல்வி தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானங்கள் மற்றும் நாட்டின் இளம் சந்ததியினர் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரவேற்கத்தக்க விடயங்களை வரவேற்றும் கண்டிக்கக்கூடிய விடயங்களைக் கடுமையாக கண்டித்தும் எதிர்கட்சியினால் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளை மிகச்சிறந்த முறையில் அகில விராஜ் காரியவசம் அவர்கள் முன்னெடுத்தார். இவர் 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் குளியாப்பிட்டிய தொகுதி அமைப்பாளாராக நியமனம் பெற்றார்.
 
இளம் பலத்துடன் கட்சியைச்சூழ மக்களை அணிதிரட்டி தமது போராட்ட அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுத்த இவர் 2007 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் முன்னனியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். கிராமங்கள் தோறும் சென்று இளைஞர் முன்னனிகளை மீள் கட்டமைக்கும் பொறுப்பினை ஏற்று தமக்கெதிரான உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் ஏனைய சவால்களையும் வெற்றிகொண்டு அதனை சிறப்பான முறையில் முன்னெடுத்துச் சென்றார்.
 
2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் இரண்டாவது இடத்திற்குத் தெரிவாக இவர் கட்சிக்கு எதிரான சவால்கள் மற்றும் இழிவுபடுத்தல்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் கட்சி ஆதரவாளர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காகவும் தொடர்ந்தும் அற்பணிப்புடன் செயற்பட்டார்..
 
இக்கட்டான கால கட்டங்களில் எக்காரணம் கொண்டும் தமது கட்சியையும் கட்சித் தலைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. சகல சந்தர்ப்பங்களிலும் கட்சியின் செயற்பாடுகளையும் பின்நகர்த்தாது முன்னேடுக்கும் பொறுப்பினை ஏற்று மேற்கொள்ளும் அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்.
 
தமது ஆற்றல்மிக்க உரை, தலைமைத்துவத்தையும் சித்தரித்துக் காட்டும் வகையில் கட்சியின் மேடைகளில் தமக்கே உரிய பாணியில்  மக்களின் உள்ளங்களை வெற்றிகொண்ட இவர் ஜனநாயகத்திற்காகவும் நியாயம்மிக்க சமூகத்திற்காகவும் நேர்மைக்கான எதிர்பார்ப்பிற்காகவும் தமது அற்பணிப்புமிக்க சேவையினை வழங்கினார்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவராக கட்சியின் ஒழுங்கமைப்புப் பணிகளை முன்னெடுத்த இவர் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய இளம் தலைவராக அகில விராஜ் காரியவசம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் புரட்சிக்காக பொறுப்பு வாய்ந்த பணிகளை நிறைவேற்றினார்.
 
நல்லாட்சியினை நாட்டில் உருவாக்குவதற்காக அரசியில் பேதங்கள் இன்றி கட்டியெழுப்பப்பட்ட புதிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் பதவி இவருக்கு கிடைக்கப்பெற்றது.
 
இது 2015 ஜனவரி மாதம் 12 ஆம் திகதியே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றது.
 
பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியின் கல்விக்குப் பொறுப்பான உறுப்பினராக செயற்பட்ட இவர் நாட்டின் கல்வித் துறையின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான அறிவு மற்றும் விளக்கத்தையும் பெற்றிருந்தார். இதன் மூலம் தமது அமைச்சுப் பதவியை வெற்றிகரமாக்க இவருக்கு ஆக்கத்திறன் மிக்க தலைமைத்துவத்தை வழங்க முடிந்துள்ளது.
 
2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி மக்களின் இறைமைக்கமைய வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை 2015 ஆக்ஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் தெரிவாகும் நோக்குடன் போட்டியிட முன்வந்தார்.
 
இவர் அச்சந்தர்ப்பத்தில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவே தீர்மானித்தார். எதிர்கட்சியில் இருக்கும்போது பெற்ற அனுபவங்கள் மூலம் எந்த சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய பயிற்சியைப் பெற்றிருந்த அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அபிமானத்திற்காக துணிச்சல் மிகுந்த பயணத்தை மேற்கொண்டு வெற்றிக்காக பெரும் அற்பணிப்புக்களை மேற்கொண்டார்.
 
2015 பொதுத்தேர்தலில் 286,155 விருப்பு வாக்குகளைப் பெற்று குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது இடத்திற்குத் தெரிவான அகில விராஜ் காரியவசம் அவர்கள் இம்முறை தேர்தலில் தற்போதைய பிரதமரை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் அபேட்சகர் ஒருவர் பெற்றுக் கொண்ட கூடுதலான விருப்பு வாக்குகளுக்கு உரிமை கோருகின்றார்.
 
அதற்குப் பின்னர் புதிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சராக பதவி ஏற்றதுடன் முன்னர் இருந்த விடயப்பரப்பிற்கு மேலதிகமான தொல்பொருளியல் மற்றும் கலாசார விடயப்பரப்புக்களின் பொறுப்புக்களும் இவருக்கு வழங்கப்பட்டது.
 
ஊழல் மோசடிகளுக்கு எதிராக மற்றும் நாட்டின் சிறார்களின் நாளைய தினத்திற்காக தீர்மானங்களை எடுத்து சட்டத்தின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் பின்னனியில் அரச உத்தியோகத்தர்களின் அபிமானத்தையும் பாதுகாத்து தமது அரசியல் தலைமைத்துவத்தை வழங்க ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆசீர்வாதத்துடனேயே அவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்.
 
அத்துடன் சர்வதேச ரீதியில் நாட்டின் கீர்த்தியை மேம்படுத்தும் வகையில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் இணைந்த நிறுவனமான யுனெஸ்கோ அமைப்பின் இலங்கைத் தலைவராகவும் தெரிவான அகில விராஜ் காரியவசம் அவர்கள்; 186 நாடுகளில் 149 நாடுகளின் வாக்குக்களைப் பெற்று யுனெஸ்கோ அமைப்பின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவராகவும் நியமனம் பெற்றார். இது சர்வதேச உறவுகளின் பொன்னான யுகத்திற்கு அடித்தளம் இடக்கூடிய அம்சமாக அமைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இப்பதவிக்காக போட்டியிட்டு பெற்றுக்கொண்ட அதிகூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டமையும் விசேட அம்சமாகும். அதேபோன்று ஏனைய அங்கத்தவர்களுக்;கிடையே இளம் வயது அங்கத்தவராகவும் இவர் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
 
கல்வி அமைச்சர் என்ற வகையில் இவரினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பல வேலைத்திட்டங்கள் இன்று பல இலட்சக்கணக்கான பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
 
ஊழல் மோசடிகள், கமிசனுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிறார்களின் பாடசாலைச் சீருடைத் துணிக்காக அரசினால் ஒதுக்கப்படும் பயன்களை நேரடியாக பிள்ளைகளின் கைகளுக்கு வழங்கும் நோக்குடன் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலை முறைமைக்கு சீருடை வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
பிரபல பாடசாலைகள் என்ற மனோநிலையினால் அவதியுறும் பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்காக தமது இல்லத்திற்கு அருகாமையிலுள்ள பாடசாலைக்கு சேரக்கூடிய வகையில் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தை அமுல்படுத்தி பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய பாரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
இவரது யோசனைக்கமைய அமுல்படுத்தப்பட்டுள்ள அதிச்சிறந்த பாடசாலைக்குப் பதிலாக சகல வளங்களும் கொண்ட பாடசாலைகளை உருவாக்கி நகரங்களுக்கு மாத்திரம் கேந்திரமாக இருந்த பௌதீக வளங்கள் மற்றும் மானிட வளங்களைக் கிராமியப் பாடசாலைகளுக்கும் வழங்கி இலவசக் கல்வியின் யதார்த்தத்தை பிரயோக ரீதியில் அமுல்படுத்த பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
நவீன உலகிற்கு ஏற்றவாறு தொழிற்சந்தையை வெற்றிகொள்ளக்கூடிய இளைஞர் யுவதிகளை உருவாக்குவதற்காகவும் இளம் பராயத்தில் சிறுவர்களின் கல்வி உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் 13 ஆண்டுகள் தொடர்ந்தும் கல்வியை வழங்கும் வேலைத்திட்டமும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலுடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
சாதாரண தரப் பரீட்சையில் வெற்றிகொள்ள முடியாத நிலையில் பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுச் செல்லும் பல இலட்சக் கணக்கான மாணவர்களைப் பாதுகாத்து அவர்களின் நாளைய தினத்திற்காக தொழில்சார் கல்வியை பாடசாலை முறையில் வழங்கும் வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
நவீன தொழில்நுட்பத்தை வகுப்பறைக்குக் கொண்டுவந்து அதன் மூலம் நாட்டில் முதல் தடவையாக (Smart Classroom) வேலைத்திட்டத்தின் முன்னோடியாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் திகழ்கின்றார்.
 
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணணிகளை வழங்கி உலகளாவிய அறிவினை மாணவர்களுக்கு வழங்குவதற்கான வாயிலைத் திறக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். 45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக 2 இலட்சம் ரூபா வீதம் வருடாந்தக் காப்புறுதியை வழங்கி அவர்களின் வாழ்க்கையைத் தேகாரோக்கியமிக்கதாக மாற்றிமைப்பதற்கும் தேவையான வாய்ப்பினை வழங்குவதற்கும் பெற்றோருக்குக் காணப்பட்ட பொறுப்புக்களில் ஒரு பகுதியினை அரசாங்கமும் பொறுப்பேற்க இவரது தலைமைத்துவத்தினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
அரசியல் அழுத்தங்களுக்குட்பட்டிருந்த கல்வி முறைமையினை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய நேரத்திற்கு போட்டிப் பரீட்சைகளை நடாத்தி அரசியல் போதங்கள் இன்றி தகைமை கொண்டோருக்கு தகைமை கொண்ட இடங்களை வழங்கி அவர்களின் பங்களிப்பை நாட்டின் கல்வி முறைமைக்கு வழங்கத் தேவையான வழிகாட்டல்களை முன்னெடுக்கவும் அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்து ஆண்டுகளாக நடாத்தப்படாத அதிபர்களைத் சேர்த்துக் கொள்ளும் போட்டிப் பரீட்சைகளை நடாத்தி 21,000 பேர்களில் சிறந்த தகைமைகொண்ட 3,901 பேர் அதிபர் சேவையில் (iii) தரத்திற்கு நியமிக்கவும் இவர் நடவடிக்கை எடுத்தார். இவர்களின் சேவைகளை அதிபர் என்ற வகையில் கல்வி முறைமைக்குப் பெற்றுக் கொள்வதற்காகத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
 
பல ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாது வெற்றிடமாகக் காணப்பட்ட கல்வி நிருவாக சேவைக்காக 852 நியமனங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைகளை நடாத்தி திறமை கொண்டோரை சேர்த்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
 
அது மாத்திரமின்றி இவர்களின் தலைமைத்துவம், முகாமைத்துவப் பண்புகளை விருத்தி செய்வதற்காக உள்நாட்டு வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கான வாய்ப்பினை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மானிட வள விருத்தி, கல்வியின் பண்புசார் தர விருத்திக்காகவும் வழங்கப்படும் ஒத்துழைப்புக்கள் தூரநோக்கு கொண்டதாக செயற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 
 
தூரநோக்கற்ற அரசியல் தலையீடுகள் காரணமாக பாடசாலை முறையில் ஆசிரியர்களைப் பகிரும் முறன்பாடுகளுக்காக நிரந்தரமான தீர்வினை வழங்கும் நோக்குடன் தேசிய மட்டத்தில் ஆசிரியர்களை சமநிலைப்படுத்துவதற்கான முன்னோடிப் பணிகளும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டன.
 
பாடசாலை மாணவர்கள் மத்தியில் துரிதகதியில் வேகமாக பரவிச்செல்லும் தொற்று நோய்களைத் தடுக்கவும், பாடசாலை சமூகத்தின் தேகாரோக்கியம், பலம் பொருந்திய இளைஞர் யுவதிகளை சமூக மயப்படுத்துவதற்கும் உலகை வெற்றிகொள்ளும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் தேவையான வழிமுறைகளை ஆரம்பித்து பாடசாலை விளையாட்டுக்களை மேம்படுத்துவற்காக 05 ஆண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் இவரினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாடசாலை விளையாட்டுத் துறையில் பாரிய மாற்றங்களும் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
 
தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் திடீர் உணவுகள், இனிப்புப்பாணங்கள் பயன்படுத்துவதனால் பிள்ளைகள் எதிர்கொள்ளக்கூடிய போசாக்கு முறன்பாடுகளினால் நோய்வாய்ப்படுவதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்காக பாடசாலை உணவகங்களை மேற்பார்வை செய்வதற்கான முறையும் கல்வி அமைச்சரின் ஆலோசனைகளுக்கமைய முன்னெடுக்கப்பட்டன.
 
 
ஊழல் மோசடிகள், வினைத்திறனின்மை, தாமதம் உட்பட உத்தியோகத்தர் வாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்து அபிவிருத்தியுடன் கூடிய தேவைகளுக்கமைய மாற்றமடைந்து செல்லும் சமூக நியாயங்கள், கலாசார பெறுமதிகள் கொண்ட சிறந்த பிரஜைகளை நாட்டிற்காக கல்வி முறையிலிருந்து உருவாக்க இந்த இளம் கல்வி அமைச்சர் அதற்குத் தேவையான அத்திவாரத்தை இட்டுள்ளார்.
 
சமூகத்திற்குப் பொருத்தமற்ற காலங்கடந்த சுற்றறிக்கைகளை மாற்றியமைத்து காலத்திற்கு ஏற்றவாறு புதிய சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கும் ஆலோசனைகளை வழங்கவும் இவர் நாட்டின் கல்வித் துறைக்கு வழங்கி வரும் பங்களிப்புக்களுக்கு முழு நாட்டு மக்களும் நன்றி தெரிவிக்கின்றனர்.
 
கல்வி அமைச்சிற்கு மேலதிகமாக அமைச்சருக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள தொல்பொருளியல் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தேசிய சுவடிக்கூட பாதுகாப்புத் திணைக்களம், நூலக மற்றும் சுவடிக்கூட சேவை சபை,  டவர்கோள் மண்டபம், அபேகம உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி அவற்றை அதிசிறந்த நிறுவனங்களாக மாற்றிமைப்பதற்கும் அவற்றின் உயர்ந்தபட்ச பெறுபேறுகளை எட்டுவதற்கும் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
டவர்கோள் கலைஞர்களுக்காக ஒய்வூதிய சம்பள முறைமையினை அறிமுகப்படுத்திய முன்னோடியான அகில விராஜ் காரியவசம் அவர்கள் நோய் வாய்ப்பட்டுள்ள மற்றும் விசேட தேவைகள் கொண்ட கலைஞர்களுக்காக உதவிகளை வழங்குவதற்கும் விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கப்பித்துள்ளார். 
 
நூலக மற்றும் சுவடிக்கூட சேவை சபை புதிய தொழில்நுட்ப முறைகளை வலுவூட்டுவதற்காகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிசிறந்ததாக அறிமுகப்படுத்துவதற்கும் முன்னோடிப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 
 
நாட்டின் வரலாற்று உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புவாய்ந்த கடமைகளை மேற்கொள்வதைப் பிரதான பணியாகக் கொண்ட அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தேசத்தின் உயிர் நாடியான தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்தை அபிவிருத்தி செய்வதற்காக நவீன யுகத்திற்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்துவதற்காகவும் பல நடவடிக்கைகளுக்காக தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார்.
 
உலக மரபுரிமையாகக் கருதப்படும் சீகிரியா சுவர் ஒவியங்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நிபுனர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் முன்னோடியாகச் செயற்படுகின்றார். தொல்பொருளியல் அகழ்வு, புதிய கண்டுபிடிப்புக்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் உரிய விடயங்களைக் கண்டறிந்து அவற்றிக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் இவரினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
 
சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்காகவும் தமது அமைச்சின் ஊடாக நேரடிப் பங்களிப்பினை வழங்கும் கல்வி அமைச்சர், மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல் பொருளியல் திணைக்களத்திற்குரிய தொல்பொருளியல் இடங்களான (சீகிரியா, அனுராதபுரம், பொலன்னறுவை, கதிர்காமம், கண்டி போன்ற) சகலவற்றினதும் வசதிகளை விருத்தி செய்து சுற்றுலாக் துறையினை வெற்றிக் கொள்ளக்கூடிய வகையில் அவற்றை நவீன மயப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு மேலதிகமாக சுற்றுலாக் கவர்ச்சியினை வெற்றிக் கொள்ளக்கூடிய வகையில் எமது பாரம்பரிய உரிமையினைப் பாதுகாப்பதற்காகவும் அவற்றினை எதிர்கால சந்ததியினருக்காக வழங்குவதற்காகவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்காக தொடர்ச்சியான பங்களிப்பு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் வழங்கப்படுகின்றது.
 
நாடுகள் தோறும் நாட்டின் அபிமானத்தையும் கௌரவத்தையும் அதிஉண்ணத நிலைக்கு இட்டுச் சென்று தொடர்ந்தும் அற்பணிப்புச் செய்யும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மக்களின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அற்பணிப்புமிக்க பொறுப்புக்களை ஏற்று சட்டத்தை கௌரவிக்கும் மற்றும் நேர்மையான மக்கள் பிரதிநிதியாக தமது தாயகத்திற்காக அரும் தொண்டாற்றுகின்றார்.

தொலைநோக்கு

குரல் எழுப்ப வல்லவர்களுக்காக குரல்எழுப்புதல்
குரலை எழுப்பி எதிர்கால வாய்ப்புக்களைப் பெறுங்கள்
இலங்கையின் எதிர்காலத்தை இளைஞர்தம் கரங்களில் தருவதே என் குறிக்கோல்

குறிக்கோள்

“இளமையின் குரல்” – “இளைஞர் குரலுக்காகவே நாடு”

Search