பிந்திய செய்திகள்

பாடப்புத்தகங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சரின் பதில்

பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சரின் வாழ்த்துச்செய்தி உள்ளடக்கப்படுவதால் அரசிற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக முன்னாள் பதில் கல்வி ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் 1980 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கியதில் இருந்து கல்வி அமைச்சரின் வாழ்த்து செய்தி அச்சிடப்படுகின்றது. மேலும் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை பெற்று முதலாமிடம் பெற்ற எனக்கு பாடபுத்தகங்களில் செய்தி வெளியிட்டு பிரபலமாக வேண்டிய அவசியமில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பெற்றுக்கொண்டதன் பின்னரே முன்வைக்ககப்படுகின்றது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Search