சுரக்சா காப்புறுதி திட்டத்தின் பயன்கள் வேகமாக மாணவர்கள் வசம் ...
இலவச கல்விக்கான வாய்ப்புகளை மேலும் பூரணப்படுத்தும் வகையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய ,மாகாண மற்றும் தனியார் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் பிரதிலாபகங்கள் கிடைக்கும் வகையில் சுரக்சா காப்புறுதி திட்டம் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட சுரக்சா காப்புறுதி திட்டத்தின் பயன்களை அதிகளவில் மாணவர்கள் பெற்றுள்ளனர். இதன்படி சுரக்சா காப்புறுதி வேகமாக மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுரக்சா காப்புறுதி திட்டத்தின் ஊடாக மாணவர்களின் அவசர சிகிச்சை, பெற்றோர்களின் உயிரிழப்பு போன்ற பல்வேறு பிரிவகளின் கீழ் காப்புறுதியின் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும். அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் போதும் காப்புறுதியின் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
சுரக்சா காப்புறுதி திட்டம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இந்த காப்புறுதி திட்டத்தின் ஊடாக தற்போதைக்கு 11,740 மாணவர்கள் 533 மில்லியன் ரூபா வரை காப்புறுதி பிரதிலாபகங்களை பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இந்த பிரதிலாபங்கள் மாணவர்களுக்கு முழுமையாக செலுத்தப்பட்டு விட்டது.