பிந்திய செய்திகள்

அநாதை இல்லங்களிலுள்ள சிறுவர்கள் அனைவரும் அருகிலுள்ள தேசிய பாடசாலைகளில் உள்நுழைவதற்கு வாய்ப்பு வழங்க நடவடிக்கை

அரசினால் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அநாதை இல்லங்களிலுள்ள பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் அனைவரும் அநாதை இல்லங்களுக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலைகளில் உள்நுழைவதற்கு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அண்மையில் பிரபல பாடசாலையொன்றுக்கு அநாதை இல்லத்தில் உள்ள சிறுவர்கள் பலர் விண்ணப்பித்த போது அப்பாடசாலை அதிபர் குறித்த விண்ணப்பங்களை நிராகரித்த தகவல் அமைச்சருக்கு கிடைத்தமை அடுத்து  அமைச்சர் இந்த ஆலோசனையை விடுத்துள்ளார்.
சிறுவர்களுக்கு கல்வியை பயில்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெற்றோர்கள் இழந்த பிள்ளைகளை பிரித்து நோக்கும் செயலை வண்மையாக கண்டிப்பதுடன் கல்வியின் ஊடாக வாழ்க்கையை வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை அனைத்து சிறுவர்களுக்கும் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Search