ஆங்கில மொழியை இலகுவாக கையாளக் கூடிய தொழிலாளர் படையணியை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் வசதிகள் குறைந்த பிரதேச பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியில் கதைக்கும் திறமையை வளர்க்க இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ டெப்லிஸ்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (08) கல்வி அமைச்சில் நடைபெற்றது.
அமெரிக்காவின் தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களின் சேவை 1960 ஆம் ஆண்டு முதல் 90 வரை வழங்கப்பட்டு டெலிக் ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை மீண்டும் வழங்க விருப்பம் கொண்டுள்ளது.இதன்படி முதலாம் கட்டமாக 30 ஆசிரியர்களுடன் ஆரம்பித்து 150 வரையான ஆசிரியர்களை கொண்ட குழுவின் ஊடாக வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்களுக்கு சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழி கற்பித்தல் சேவையை அமெரிக்க தன்னார்வ ஆசிரியர்கள் குழாம் வழங்கவுள்ளது. அத்துடன் ஒரு ஆசிரியரின் தன்னார்வ சேவைக்காலம் 2 வருடங்களாகும்.