பிந்திய செய்திகள்

தொழில்நுட்பவியல் கல்வியற் கல்லூரிக்கு அத்திவாரமிட்டமையின் ஊடாக இலங்கையானது தொழில்நுட்ப துறையில் முன்னேறி செல்ல பொன்னான வாய்ப்பாக அமையும்

 

தொழில்நுட்பவியல் கல்வியற் கல்லூரிக்கு அத்திவாரமிட்டமையின் ஊடாக இலங்கையானது தொழில்நுட்ப துறையில் முன்னேறி செல்வதற்கான பொன்னான வாய்ப்பாக அமையும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

குளியாபிட்டி நகர அடிப்படையாக கொண்டு 23,593 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்  இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் புதிய நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நடல், வடமேல் பல்கலைகழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பீடத்தை திறந்து வைத்தல், குளியாபிட்டிய வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தல், புதிய சந்தை கட்டத்தை தொகுதிக்கு அடிக்கல்நடல் , நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுரங்க பாதையை திறந்து வைத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம். ராஜித சேனாரத்ன உட்பட அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அத்துடன் கடந்த காலங்களில் மூவாயிரம் அளவிலான ஆசிரியர் பயிலுனர்களே கல்வியற் கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டனர். ஆனாலும் இம்முறை நான்காயிரத்துக்கும் அதிகமானோர் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு இரு வருடங்கள் தாமதம் ஏற்பட்டது.  அதனை சீர் செய்வதற்காக ஒரு தவனையில் எட்டாயிரத்துக்கும் அதிகமானோரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று அண்மையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 16,000 பட்டதாரிகளில் 5000 பேரை உரிய பாடப்பரப்புகளுக்கு அமைவாக கல்வி கட்டமைப்பில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

ஆகவே இன்றைய தினம் குளியாபிட்டியில் தொழில்நுட்பவியல் கல்வியற் கல்லூரிக்கு மேலதிகமாக 23,593 மில்லியன் ரூபா செலவிலான அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்த ஏற்பாடாகியுள்ளது. தற்போதைய அரசாங்கம் குருநாகலை அடிப்படையாக கொண்டு  அதிவேக பாதை உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

Search