இம்மாதமளவில் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய பாடசாலை மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கவுள்ளதுடன் இதன்மூலம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு இரண்டாம் கட்டமாக மாகாண பாடசாலை உயர் தர மாணவர்களுக்கும் டெப் கணிணி வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பயிற்சியுடனும் புதிய அறிவுடனும் கூடிய தொழிலாளர் படையணியை உருவாக்க வேண்டும். இதற்பிரகாரமே தொழில் கல்வியையும் தொழில்நுட்ப கல்வியையும் கல்வி திட்டத்தில் இணைத்துள்ளோம். இதன்படி தொழில்நுட்ப கல்வியை பயிற்சிவிப்பதற்கு காணப்படும் ஆசிரியர்களுக்கான பற்றாகுறையை நீக்கும் பொருட்டு இன்று இலங்கையின் முதற்தடவையாக தொழில்நுட்பவியல் தேசிய கல்வியற் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தொழில்நுட்ப கல்வியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்க முடியும். எனினும் இந்த ஒரு கல்வியற் கல்லூரி மாத்திரம் போதாது. தற்போது இயங்கும் கல்வியற் கல்லூரிகளிலும் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக் வேண்டும். வெளிநாடுகளை போன்று இலங்கையிலும் பயிற்சியுடன் கூடிய தொழிலாளர் படையணியை நாம் உருவாக்க வேண்டும். எனவே பயிற்சியுடனும் புதிய அறிவுடனும் கூடிய தொழிலாளர்கள் உருவானால் நாட்டின் பொருளாதாரம் வளம் பெற்று நாட்டின் உற்பத்தி சார் வருமானமும் அதிகரிக்கும். ஆகவே பயிற்சியுடன் கூடிய தொழிலாளர் படையணியை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் என்றார்.