மலரும் குளியாபிட்டிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மயமானது. இதன்படி இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் கல்வியற் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் புதிய நூலக கட்டடத்திற்கும் அடிக்கல் நடப்பட்டது. மேலும் வட மேல் பல்கலைகழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பீடம் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதுடன் குளியாபிட்டிய வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தியதோடு, புதிய கட்டடத்திற்கும் அடிக்கல் நடப்பட்டது. மேலும் குளியாபிட்டிய நகரின் பிரதான சுரங்க பாதையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் வீதி அபிவிருத்தி திட்டங்களும் மக்கள் மயப்படுத்தப்பட்டது. இந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக 23,593 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.
வட மேல் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும்....