பிந்திய செய்திகள்

தேசிய கல்வியற் கல்லூரியில் பாடநெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம்...

 

கல்வி துறையின் மனித வள மற்றும் பௌதீக வள வளர்ச்சிக்காக தற்போதைய அரசாங்கம் பாரிய அர்ப்பணிப்பு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் 2015/2017 கல்வியாண்டுக்கான போதனா கல்வி பாடநெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (08) அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கம் கல்வி துறையை நவீனமயப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்படி 4286 டிப்ளோமாதாரிகளில் சிங்கள மொழிமூலமான டிப்ளோமாதாரிகள் 2340 பேருக்கும் தமிழ் மொழி மூலமானவர்கள் 1300 பேருக்கும் ஆங்கில மொழிமூலமானவர்கள் 646 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன.

Search