சிங்கள இலக்கிய புத்தகங்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் சிங்களத்திலும் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்காக புதிய திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் கே. பத்மநாதன் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா பம்பலப்பிட்டிய சரஸ்வதி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.