பிந்திய செய்திகள்

உயர் தர தொழிற் கல்வியை அமுல்ப்படுத்தும் 299 பாடசாலைகளுக்கு 158 மில்லியன் ரூபா நிதி உதவி

உயர் தர தொழிற் கல்வியை அமுல்ப்படுத்தும் 299 பாடசாலைகளுக்கு 158 மில்லியன் ரூபா நிதி உதவி

13 வருட உத்தரவாத கல்வி திட்டத்தின் கீழ் உயர்தரத்தில் தொழிற் கல்வியை வழங்கும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பாடசாலைகளுக்கு மூன்று கட்டங்களாக நிதி உதவி வழஙக திட்டமிடப்பட்டுள்ளன. குறைந்த பட்ச நிதியுதவியாக 500,000 ரூபா  வழங்கப்படவுள்ளது.இந்த நிதியுதவியை உரிய ஒழுங்குகளின் பிரகாரம் செலவிட வேணடும் என 40;2018 சுற்று நிருபத்தின்  ஊடாக குறித்த பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டத்தின் ஊடாக சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெற்றாலும் பெறாவிட்டாலும் உயர்தரத்தில் தொழிற் கல்வி பாடத்தை பயிலும் வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 13 வருட கல்வியின் பின்னர் NVQ 4 சான்றிதழும் பரீட்சைகள் திணைக்களத்தினால் தொழில் கல்வி தொடர்பான உயர் சான்றிதழும வழங்க்பபடும்.
 

Search