க.பொ.த. (சா.த.) சித்தியடைந்து உயர் தர வகுப்புக்காக மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சை பாடசாலைகளில் நடைபெறும்போது மாணவர்களின் புள்ளிகளோடு அவர்களின் பாடங்களின் ஊடாக விளையாட்டுடன் ஏனைய பிரிவுகளில் வெளிப்படுத்தப்படும் திறமைகளையும் கவனத்தில் எடுக்கப்படும். அதற்கமைய அதிகப் புள்ளிகளைப் பெறும் திறமையான மாணவர்கள் உயர் தரக் கல்விக்காக வேறு பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதோடு உயர் தர கல்வியில் தாம் விரும்பும் பாடத்தினை தெரிவுசெய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதோடு அந்த பாடம் அந்த பாடசாலையில் இல்லையெனில் வேறு பாடசாலைகளில் சேர்வதற்கான வாய்ப்பு அம்மாணவர்களுக்கு கிடைக்கின்றது.
மேலும் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வசதிகளுக்கான கட்டணத்தை தவிர பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெறப்படும் பணம் குறித்து கல்வி அமைச்சுச் செயலாளர் அல்லது மாகாண கல்வி அமைச்சுச் செயலாளரிடம் அனுமதி பெறவேண்டும். இதுகுறித்த முறைப்பாடுகளை கல்வி அமைச்சின் 1988 என்ற உடனடி தொலைபேசி எண்ணிற்கு முறைப்பாட்டினை தெரிவிக்க இயலும். சில பாடசாலைகளில் நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும் விதம் மற்றும் மாணவர்களிடம் பணம் அறவிடப்படுவது குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்ததையிட்டு பாடசாலைகளில் நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையில் மாணவர்களுக்கு அசாதாரணம் ஏற்படுகின்றதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.