இந்தியா மற்றும் இலங்கையிடையே நிலவும் பௌத்த மத கோட்பாட்டினை பாதுகாப்பது மற்றும் இராஜதந்திர நடவடிக்கையை பலப்படுத்தும் நோக்கத்தினூடாக புதுதில்லி நகரில் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் தோரணையை கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் 15 ம் திகதி திறந்துவைத்தார்.
இந்தியாவின் புதுதில்லி நகரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள (Ceremonial Route) ல் மேற்படி வெசாக் வலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இருநூற்றிற்கு அதிகமான விளக்கு கூடுகளும் வெசாக் அலங்காரமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே முதல்தடவையாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன.
இந்த தோரணையில் “அங்குலிமாலா கதை” வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் நாற்பது அடி உயரத்திலான தோரணை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கான மின் குமிழ்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரமாகும். தோரண கதை இந்தி மொழியில் சொல்லப்படுவதோடு பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன. மேற்படி விழாவில் சமய நிகழ்வுகளை இந்தியாவின் மகா போதி சங்கத்தின் வாரனாசி மத்தியஸ்தலம் மற்றும் புதுதில்லி மத்தியஸ்தலத்தின் விகாராதிபதி குருமார்கள் நடாத்திவைத்தனர்.