2009 மற்றும் 2010 ம் ஆண்டிற்கான அதிபர் சேவையின் iii ம் தரத்திலுள்ள அதிகாரிகளை ii ம் தர உயர்வுக்கான ஆவணப் பத்திரங்கள் பரிசோதனை 2017 ஜுன் மாதம் 2, 5, 6 மற்றும் 12 ம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறும். இதற்கென 1056 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை அதிபர் சேவையின் ii ம் தர அதிகாரிகளை i ம் தர உயர்வுக்கான அடிப்படை தகுதிகாண் பரிசோதனை 2017 ஜுன் மாதம் 6, 13, 15, 16, 20 மற்றும் 22 ம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறும். இதற்கென 1912 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித் துறையிலுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பதவி உயர்வு கடந்த காலங்களில் சரியான முறையில் இடம்பெறவில்லை என்ற தகவல்களின் அடிப்படையில் மேற்படி பதவி உயர்வு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் அமைச்சினுடாக கல்வித்துறை அதிகாரிகளின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அவசியமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பதாக அதனை கல்வி அமைச்சின் உள்ளக தகவல்கள் ஊடாக அறிந்துகொள்ளும் சில தொழிற்சங்கங்கள் அத்தகைய கோரிக்கைகளை தாம் பெற்றுக்கொடுப்பதாக கூறிக்கொண்டு ஆசியர் மற்றும் அதிபர்களை தவறாக வழிநடத்தி பல்வேறு போராட்டங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. மேலும் தமது தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாகவே இத்தகைய கோரிக்கைகள் வெற்றிப்பெற்றதாக ஊடக சந்திப்பினை மேற்கொள்வதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் தொழிற்சங்கங்களின் சுய விருப்பு மற்றும் அரசியல் ஆதாயங்களுக்கு மேலாக முழு நாட்டின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சுமார் நாற்பத்தைந்து இலட்ச பாடசாலை மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.