பிந்திய செய்திகள்

இலங்கையின் கல்விச் சான்றிதழலுக்கான சர்வதேச அங்கீகாரத்தினை மேலும் உறுதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இலங்கையின் கல்விச் சான்றிதழலுக்கான சர்வதேச அங்கீகாரத்தினை மேலும் உறுதி செய்வது தொடர்பாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அறிவுறுத்தலின்படி இலங்கை பரீட்சை திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டில் வசிப்பவர் பரீட்சை திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து பெற்றுக்கொள்ளும் பரீட்சை சான்றிதழின் பிரதியினை அந்தந்த வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிப்போர் போலிச் சான்றிதழை பாவிப்பது தடைசெய்யப்படுவதோடு இலங்கையின் கல்விச் சான்றிதழலுக்கான சர்வதேச அங்கீகாரத்தினை மேலும் உறுதி செய்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். 

2019 ம் ஆண்டு முதல் கல்வி பொது சாதாரணத்தரச் சான்றிதழ் மற்றும் உயர் தரச் சான்றிதழ் பரீட்சைகள் இரண்டையும் ஒரே கால அட்டவணையில் நடத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தின்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு தேவையான நடைமுறை சாத்தியக்கூறு அமைப்பது பற்றியும் அச்சு இயந்திரங்களை நவீன மயப்படுத்தல் தேவையான மனிதவளங்களை பெற்றுக்கொள்ளல் போன்றவைகளை துரிதப்படுத்தல் என்பன அமைச்சர் அவர்களால் பணிந்துரைக்கப்பட்டது. பரீட்சை திணைக்களத்தின் ஆணையானர் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றிய மண்டல கூட்டத்தின்போதே மேற்படி கருத்துக்களை கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Search