மண்சரிவு எச்சரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வரவாற்று சிறப்பு மிக்க பாஹியன் குகை குறித்து பல்வேறு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 4ம் திகதி பாஹியன் குகையின் தற்போதைய நிலைமை குறித்து அங்கு ஆராயச் சென்ற குழுவில் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் தகவல்களை ஆராய்ந்து அமைச்சர் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கமைய தொல்பொருளியல், வாஸ்து, நிலவியல், பொறியியலாளர்கள் போன்ற பல்வேறு துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த அறிக்கையை துரிதமாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாக அருகிலுள்ள விகாரையிலுள்ள சுமார் 30 புத்த பிக்குகளின் வாழ்விற்கும் அச்சுறுத்தலாகவுள்ளது. எனவே புத்த பிக்குகளின் பாதுகாப்புக் கருதி தற்காலிக கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கு
மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிரசன்ன குணவர்தன அவர்களுக்கு அமைச்சர் அவர்கள் ஆலோசனை கூறினார்.
58000 ஆண்டு கால இதிகாசத்தை எடுத்துக் கூறுகின்ற இலங்கையின் மிகப்பெரிய இயற்கையான குகையென அறியப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பாஹியன் குகையை எதிர்கால சந்ததியினர்க்கு பாதுகாப்பது தேசிய கடமையாகும். மேலும் சர்வதேசத் தரத்தில் அதிக வரவேற்பைக்கொண்ட இந்த மதிப்புமிக்க தொல்பொருள் இடத்தினை பாதுகாப்பது தொடர்பாக பூரண நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.