திடீர் அனர்த்த நிலைமை காரணமாக பாதிப்புக்குள்ளான மாணவர்களின் மனநிலைமையை உயர்த்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் உறவுகளை இழந்த, சொத்துக்களை இழந்த, பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்களின் மனதில் சக்தியை கட்டியெழுப்புவதற்கும், அவர்கள் மீண்டும் சக்திமிக்க குடிமக்களாக சமுதாயத்தில் வாழ்வதற்குமான நோக்கத்தைக் கொண்ட விசேட மன ஆலோசனை வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் சில பாடசாலைகளில் சேவை புரியும் மன ஆலோசக ஆசிரியர் மற்றும் பொறுப்புவாய்ந்த ஏனையோரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதில் தேசிய பாடசாலை மாணவ தலைவர், தலைவிகளுடன், முன்னணி மாணவர்களையும் இணைத்துக்கொண்டு பாதிப்புத்குள்ளான பிரதேச மாணவர்களுடன் சுக-துக்க பறிமாற்றத்தினை மேற்கொள்ளும் வேலைத்திட்டமும் வெகு விரைவில் கட்டியெழுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.