2017-06-05 ம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படும்.
• மேல் மாகாண அனைத்துப் பாடசாலைகள்.
• சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகள் தங்குமிட முகாம்களாகவுள்ளது, மீதமுள்ள அனைத்துப் பாடசாலைகள்.
• தெற்கு மாகாணத்தில் 10 பாடசாலைகள் தங்குமிட முகாம்களாகவும், 29 பாடசாலைகள் சேதத்திற்குள்ளானதால் மீதமுள்ள அனைத்துப் பாடசாலைகள்.
தங்குமிட முகாம்களாக முழுமையாகவும், பகுதியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிப்பதற்கான தீர்மானம் எடுக்கும் பொறுப்பு வளையக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் திடீர் அனர்த்த நிலைமையின் காரணமாக கல்வி நடவடிக்கைகளை தொடர இயலாதளவு சேதமடைந்துள்ள பாடசாலைகளின் நடவடிக்கையினை அருகிலுள்ள பாடசாலைகளுடன் இணைத்துக்கொண்டு தொடர்வதற்கான தீர்மானம் எடுக்கும் பொறுப்பு வளையக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவசியமான உதவி வழங்குவதற்கான விசேட கலந்துரையாடலில் பங்குபற்றிய கல்வி அமைச்சர் மேற்படி தீர்மானங்களை மேற்கொண்டார். கல்வி அமைச்சில் அனைத்து மண்டல உத்தியோகத்தர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பாதிப்புக்குள்ளான கட்டிடம் மற்றும் சொத்துக்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, பாடப்புத்தகங்கள், அப்பியாசக்கொப்பிகள் ஏனைய உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல், மனநிலை பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கான மன ஆலோசக ஆசிரியர் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவது போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.