கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக பாதிப்புக்குள்ளான இம்முறை நடைபெறவுள்ள க.பொ. த. உ/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சைக்கு சமூகமளிப்பதற்கு மேலதிக வாய்ப்பு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கும்படி, பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் 19 ம் திகதி நடைபெற்ற இசிபதான வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் நிறைவுபெறும்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு கௌரவ அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
மேற்படி சலுகையை வழங்கும்போது அம்மாணவர்கள் சரியான முறையில் அடையாளம் காணப்படுவர் என தெரிவித்த கௌரவ அமைச்சர், அம்மாணவர்கள் இந்நாட்டு தேசிய பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான க.பொ.த. உ/த பரீட்சைக்கு தோற்றும் கூடுதல் வாய்ப்பு எண்ணிக்கை நான்காக நீடிப்பது குறித்தும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இறுதி தீர்வு மேற்கொள்ளப்படுமென கௌரவ கல்வி அமைச்சர் தெரிவித்தார்.