டிஜிடல் ஆவண முகாமைத்துவம் மற்றும் டிஜிடல் ஆவண காப்பக பதிவேட்டுக் கூடம் அமைப்பது குறித்து விசேட சர்வதேச பயிற்சிப்பட்டறை மற்றும் சர்வதேச ஆவண பாதுகாப்பு சபையின் தென்மேற்கு ஆசிய வளைய கிளையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் கடந்த 21 ம் திகதி தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
டிஜிடல் ஆவண முகாமைத்துவம் மற்றும் டிஜிடல் ஆவண காப்பக பதிவேட்டுக் கூடம் அமைப்பது பற்றி புதிய விடயங்களை பரிமாறிக்கொள்ளல், ஒவ்வொரு நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சார ஆவணங்களின் பிரதிகளை பரிமாறிக்கொள்ளல், பதிவேட்டுக்காப்பாளர்களுக்கிடையே எதிர்கால நல்லெண்ணங்களை விருத்தி செய்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு இந்த பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ கல்வி அமைச்சர் எந்தவொரு நாட்டிலும் எழுதப்பட்ட பாரம்பரியம் மற்றும் எழுதப்பட்ட இதிகாசங்கள் சம்பந்தமாக தற்போதுள்ள முக்கிய காரணியாக நாட்டினுள் தற்போதுள்ள ஆவண காப்பகங்கள் ஆகும். அத்துடன் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அந்த தகவல்கள் முக்கியமானதாக அமைவதோடு பாரம்பரிய ஆவண காப்பக முறைமைகளை விடவும் டிஜிடல் ஆவண முகாமைத்துவம் மிகவும் வெற்றியளிக்கின்றது. பெறுமதிமிக்க ஆவண பாதுகாப்பினை மேற்கொள்வதற்கு பாரம்பரிய ஆவண காப்பக முறைமைகளை விட தேவைகளை பூர்த்தி செயதுகொள்வதற்கு இனிவரும் காலங்களில் டிஜிடல் ஆவண காப்பகம் சிறப்பானதாக அமையும் என்றார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூடான், இந்தியா, ஈரான், மாலைத்தீவு, நேபால் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கல்விச் செயலாளர் திரு. சுனில் ஹெட்டிஆரச்சி அவர்கள் தேசிய ஆவண காப்பக பணிப்பாளர் திருமதி சரோஜா வெத்தசிங்க அவர்களுடன் பலரும் கலந்துகொண்டனர்.