பாதிப்புக்குள்ளான அனைத்து பாடசாலை கட்டிடங்களையும் துரிதமாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை.
அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்கள் மீண்டும் தமது கல்வியை தொடர்வதற்கான நிலைமையை உறுதிசெய்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் விசேட பொதியினை விநியோகிக்கும் நிகழ்வு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கென கல்வி அமைச்சின் ஊடாக வழங்கிய பொதியில் ரூபாய் 10000 பெறுமதியான பொருட்கள் உள்ளடங்குகின்றன. இதில் சீருடைத்துணி 3 தொகுதி, சப்பாத்து வவுச்சர், பாடப்புத்தகங்கள், அப்பியாசக்கொப்பிகள் மற்றும் கடந்த வருட வினாத்தாள்கள் போன்றவை அடங்குகின்றன.
பாதிப்புக்குள்ளான அனைத்து பாடசாலை கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களை மீண்டும் திருத்தியமைக்க அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கு முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தமது வேண்டுக்கோளுக்கிணங்க அனைத்து பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்கள் மற்றும் கௌரவ அமைச்சர்கள் தமது ஒரு மாத சம்பள பணத்தினை வழங்கியதில் கிடைத்த ரூபாய் ஐந்து மில்லியனுக்கும் பெறப்பட்ட அப்பியாசக்கொப்பிகள் இப்பொதியில் உள்ளடங்குவதாக கௌரவ கல்வி அமைச்சர் தெரிவித்தார்.