தம்புள்ளை குகை விகாரையின் ஓவியங்கள் அழிந்து போகும் அச்சுறுத்தலுக்குள்ளாகியது சம்பந்தமாக அந்த விகாரையின் தேரர்கள் தெரிவித்ததிற்கமைய, தலையிட்டு அதனை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த விகாரையின் தற்போதைய நிலைமையினால் உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து விலகும்படியான ஆபத்து நேர்ந்துள்ளதென யுனெஸ்கோ நிறுவனத்தினூடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டமையினால் தாம் தலையீடு செய்ததாகவும், இதனை சிலர் தன்னை பைரன் என குற்றஞ்சாட்டுவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
எவர் குற்றஞ்சாட்டினாலும், நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு பைரவன் போன்று நடவடிக்கை மேற்கொள்ள தாம் தயார் என தேசிய கல்வி நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து மாடி கட்டிட திறப்புவிழாவில் 03 ம் திகதி கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் பங்கேற்று இதனை தெரிவித்தார்.
நாட்டின் கல்வியை கட்டியெழுப்பும் கடமையை நிறைவேற்றுவதே தமது பிரதான நோக்கம் என்றும், அதற்காக ஒவ்வொரு நிறுவனத் தலைவர்களும் தாம் நிறைவேற்ற வேண்டிய வேலைகளை ஒழுங்கான முறையில் செய்து முடிக்கவேண்டியது அவசியமாகும் எனக் கூறினார். சிநேகபூர்வம், அரசியல் கருத்தினை கொண்டு தாம் முடிவெடுப்பதில்லை எனவும், தாம் வகிக்கும் பதவிக்கான பொறுப்பினை ஒழுங்கான முறையில் நிறைவேற்றத் தவறும் அதிகாரிகளை விலக்குவதற்கு தாம் ஒருபோதும் தயங்கப்போவதில்லை எனவும் அமைச்சர் அவர்கள் மேலும் கருத்து தெரிவித்தார்.
பொய் மற்றும் மோசடிகளால் மக்களை தவறாக வழிநடத்திச்செல்லும் சில அரசியல்வாதிகளினால்தான் நாட்டை சீக்கிரமாக முன்னேற்ற எம்மால் இன்னும் முடியவில்லை எனவும், எத்தகைய தடைகள் மற்றும் சவால்கள் வந்தாலும் நாட்டிற்கு ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்வதே தமது நோக்கம் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் அவர்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதான அத்தியட்சகர் திருமதி ஜெயந்தி குணசேகர அவர்களுடன் பலரும் கலந்துகொண்டனர்.