சீக்கிரமாக மாறி வரும் உலகத்துடன் இணைந்து எமது எதிர்கால சந்ததியினரை தயார்படுத்துவதற்கு சில தீர்மானங்களை மேற்கொள்ளும்போது விமர்சிப்பதும் தடை போடுவதுமாக அன்றி சாதகமாக செயல்படுவோர் இருப்பார்களேயானால் அபிவிருத்திக்கான பயணம் வேகமானதாக அமையும் என கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
மிலாகிரிய புனித பவுல் மகளிர் வித்தியாலயத்தின் நான்கு மாடி விளையாட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) திறப்பு விழா 10 ம் திகதி நடைப்பெற்றபோது அதில் பங்கேற்று மேற்கண்ட கருத்தை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணணி வழங்குவதற்கு தீர்மானித்து நடவடிக்கை எடுக்கும்போது பெரும்பாலானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நவீன தொழில்நுட்பத்தை பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகப்படுததுவதற்காக கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராகவிருந்தபோது இலங்கைக்கு கணணி கொண்டுவரப்பட்டபோதும் இவ்வாறான எதிர்ப்புகளே ஏற்பட்டன எனினும் அதன் பிரதிபலன்களை இன்று முழுநாடும் பெற்றுள்ளது என்றும் பழமையான எண்ணங்களை மாற்றி காலத்திற்கேற்றபடி மாற்றத்தினை ஏற்காவிடின் மோசமான நிலைமை ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உயர்தர மாணவர்களுக்கு டெப் கணணி வழங்குவதற்கான முதல்கட்ட வேலைத்திட்டம் மற்றும் 13 வருட தொடர்ச்சியான பாடசாலை கல்வியை அனைத்து பாடசாலை பிள்ளைகளும் பெற்றுக்கொள்வதை உறுதிபடுத்தும் சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்காக உயர் தர பாடத்திட்டத்தில் 26 தொழில்முறை பாடங்களை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம், செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கௌரவ கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
உலக சவால்களை வெல்வதற்கான திறனை பாடசாலை மட்டத்தினூடாக கட்டியெழுப்புவதாயின் அனைத்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் என்று கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய பாடசாலை பணிப்பாளர் திரு. ஜயந்த விக்கிரமநாயக்க அவர்களுடன் பலரும் கலந்துகொண்டனர்.