இந்நாட்டின் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்படும்போது அதனை பாதுகாப்பதற்கு அவ்விடயம் தொடர்பாக பொறுப்பிலுள்ள அமைச்சர் என்ற வகையில் பௌத்த தத்துவம் மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளும்போது அதனை தவறாக அர்த்தப்படுத்தியும், ஆதாரமற்ற வகையில் விமர்சித்தும் குறுகிய நோக்கங்களுக்காக சில குழுக்கள் செயல்படுவது கவலையளிக்கின்றது. கைதவறிப்போயுள்ள அதிகாரங்களை மீளப்பெறும் முயற்சியில் பௌத்த மக்களை ஏமாற்றும் செயல்கள் இடம்பெற்று வருவது தெளிவாகின்றது. அவர்களின் ஊழல் மோசடிகளை மக்கள் கவனத்திலிருந்து மூடிமறைத்து திசை திருப்பும் முயற்சியாகவே தெரிகின்றது.
ஆத்மாத்மாக இந்நாட்டு பௌத்த பாரம்பரியத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்போது அதனை திரிபுபடுத்தும் செயல்களின் பின்புறத்தில் உள்ளவர்கள், இந்நாட்டு பௌத்த பாரம்பரியத்தை அழிப்பதற்கு திட்டமிடுகின்றார்களா என எமக்கு சந்தேகம் எழுகின்றது. இதனை மகா சங்க தேரர்கள் மற்றும் அரசாங்கதிற்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையென்றும், அஸ்கிரிய பீடத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் என அவர்கள் சித்தரிக்கின்றார்கள்.
தம்புள்ளை குகை விகாரையை பார்வையிடவரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவுக் கட்டணச் சீட்டு விநியோகத்திற்கு 1996 ம் ஆண்டு முதல் 2015 வரை இடம்பெற்றுள்ள மோசடி குறித்து பரிசீலனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது, 2017 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ம் திகதி தம்புள்ளை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கொடகம மங்கல தேரர் தலைமையில் மகா சங்கத்தினர், தொல்பொருள் மற்றும் மத்திய கலாச்சார நிதிய அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் நடைப்பெற்ற விசேட கூட்டத்தில் ஆகும். எனவே மகா சங்கத்தினர் மற்றும் அரசாங்கத்திற்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விகாரையின் உண்டியலில் மக்கள் பூஜித்து செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டு மீண்டும் விகாரக்கு கையளிப்பது இன்று நேற்று இடம்பெறும் விடயமல்ல. அது புத்தசாசன அமைச்சின் வசமுள்ள நடவடிக்கையாகும். இந்த சட்ட நடவடிக்கையை அறிந்திருந்தும் நாம் உண்டியலிலுள்ள ஆதாயத்தை அரசாங்கத்திற்கு கையளிக்கவுள்ளோம் என்றும், அதனை நானே செய்கின்றேன் என்றும், பௌத்த மக்களுக்கு தவறான தகவல்களை அவர்கள் பரப்புகின்றனர்.
உண்டியல் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவுக் கட்டணச் சீட்டின் ஆதாயம் பெறுவது என இரண்டு விடயங்கள் உள்ளன. இந்நாட்டு தொல்பொருள் இடங்களை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவுக் கட்டணச் சீட்டு வழங்குவது மற்றும் அதன் பணத்தினை மத்திய கலாச்சார நிதியத்தினூடாக இந்நாட்டின் தொல்பொருள் மற்றும் விகாரைகளை பாதுகாப்பதற்கு பயன்படுத்துவதற்கான அதிகாரம், தொல்பொருள் சட்டம், மத்திய கலாச்சார நிதியச் சட்டம் மற்றும் விகாரை தேவாலயங்களின் சட்டத்தின்படி எமது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க பொய் வதந்திகளை முன்னெடுப்பது கவலைக்குறியது.
மிகவும் பரிதாபமாக சேதமாக்கப்பட்டுள்ள தம்புள்ளை குகை விகாரை ஓவியங்கள் மற்றும் புத்த பகவானின் சிலைகளை பாதுகாப்பதே எமது முதல் தேவையாகும். பௌத்தர்களாக ஏராளமானோருக்கு தெரியாத எமது பாரம்பரிய பெறுமதிகள் வெளிநாட்டு நிபுணர்களின் ஊடாகவே எமக்கு தெரியவந்துள்ளது. தம்புள்ளை குகை விகாரை தொடர்பாக UNESCO நிறுவனத்தின் ஊடாக துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படியான அறிவித்தலும் அவ்வாறானதாகும். மேலும்
ICOMOS நிறுவனம் ஓவியப் பாதுகாப்பு சம்பந்தமான பேராசிரியர் திரு. வர்னர் ஸ்மித் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, விகாரை பாதுகாப்பு தொடர்பாக எடுக்கவேண்டிய சரியான தீர்மானங்களை தொல்பொருள் ஆலோசகர்கள் சபையினூடாக செய்யப்படும்.
அதற்கமைய பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படாவண்ணம் குகை விகாரைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதோடு, பாதுகாப்பு தேவைக்கேற்ப காலவரைவுக்கு உட்பட்ட வகையில் பார்வையிடவும், குகை விகாரையை தற்காலிகமாக மூடுவதற்கும் தொல்பொருள் ஆலோசகர் சபை தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக விகாராதிபதி தேரருடன் கலந்துரையாடுவது அவசியமாகும் என நாம் தீர்மானித்துள்ளோம். இவ்விடயம் தொடர்பாக சிலர் விகாரையின் பூஜை நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், விகாரையை மூடுவதாகவும் பொய்யான கருத்துக்களை சமுதாயத்தில் வெளியிடுவது கவலையளிக்கின்றது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொல்பொருள் பெறுமதியான இடங்களை தற்காலிகமாக மூடுவது உலகின் அனைத்து நாடுகளிலும் இடம்பெறுகின்றதொரு சாதாரண விடயமாகும். சீனப் பெருஞ்சுவர், இந்தியாவின் தாஜ்மகால் மற்றும் புத்தகயா மட்டுமல்ல, இலங்கையின் தலதா மாளிகை போன்ற இடங்களில் சில, சில பகுதிகளாக தேவைக்கேற்ப தற்காலிகமாக மூடிய சந்தர்ப்பங்கள் இதற்கு உதாரணங்களாகும். குகை விகாரையின் பாதுகாப்பு நடவடிக்கையினை சிறந்த முறையில் மேற்கொள்ளத் தவறினால் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து விலகும்படியான ஆபத்து நேர்ந்துவிடும். அத்துடன் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற பெறுமதியான இடத்தினை பாதுகாத்துக்கொள்ள முடியாத இனமாக இலங்கைக்கு அபகீர்த்தி உண்டாகும். ஆகையினால் தம்புள்ளை குகை விகாரை தொடர்பாக சர்வதேச கவனத்தை தவறவிட இயலாது. அமைச்சராகவும், அமைச்சாகவும் நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் நடவடிக்கை மேற்கொள்வது, பௌத்த சிந்தனை மற்றும் நாட்டில் நிலவுகின்ற சட்டங்களுக்குட்பட்டு என்பதோடு, மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்குட்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். தம்புள்ளையிலிருந்து வருடக் கணக்காக அரசியல் செய்வோர் ரங்கிரி தம்புள்ளை உலக பாரம்பரியம் அழிந்தாலும் தமது அரசியல் லாபங்கருதி பொறுப்பிலிருந்து விலகியவர்கள் இன்று தம்புள்ளை விவகாரம் தொடர்பாக முதலைக் கண்ணீர் வடிப்பதோடு, நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் விமர்சிக்கின்றனர். இதில் தெளிவாக விளங்குவது அரசியல் அதிகாரம் பெறுவதே இவர்களின் நோக்கமேயன்றி நாடு மற்றும் மதம் பற்றிய அன்பினால் அல்ல என்பதாகும்.
தம்புள்ளை குகை விகாரை தொடர்பாக உண்மையான நிலைமைகளை அறிந்திருந்தும் அதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாது குறுகிய அரசியல் லாபத்திற்காக பிழையான தகவல்களை சமுதாயத்திற்கு தருவதால் இறுதியில் கிடைக்கப்படுவது உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து விலகும்படியான நிலையேயாகும். எவ்வாறாயினும் இந்நாட்டு பௌத்த பாரம்பரியத்தை காப்பதற்கு அன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளும் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை சங்கத்தினர் உடன் மகா நாயக்க தேரர்கள், இந்நாட்டு பௌத்த பாரம்பரியம் மற்றும் புராதன இடங்களை பாதுகாப்பதற்கு ஆசீர்வதிப்பார்கள் என நாம் நம்பிக்கைக்கொண்டுள்ளோம்.