இந்நாட்களில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் விதமாக எதிர்வரும் மூன்று நாட்களான (28) வெள்ளி, (29) சனி மற்றும் (30) ஞாயிறுக்கிழமைகளில் நாடுமுழுவதும் பாடசாலைகளை தூய்மை செய்யும் வேலைத்திட்டத்தினை செயல்படுத்துமாறு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைவாக வெள்ளிக்கிழமையன்று பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறாததுடன், அன்றைய தினம் பிள்ளைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ளோரும், பாடசாலை சமூகத்துடன் இணைந்து பாடசாலை மற்றும் அதன் அண்டைப்பகுதிகளை துப்புறவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இதற்கு சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று பாடசாலைக்கு வருகைதரும்போது சீருடைக்குப் பதிலாக சிரமதான பணிகளுக்கு ஏற்ற உடையில் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்வர். இதற்கான புகை அடித்தல் நடவடிக்கை மற்றும் ஏனைய நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைக்காக பிரதேச சுகாதார உத்தியோகத்தர் மற்றும் ஏனைய ஒருங்கமைப்பு நடவடிக்கையினை அதிபர் ஊடாக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவுள்ள இந்த மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கையினை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.