அரச சொத்துக்களை மக்களுக்காக அன்றி தமது என பாவித்த அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுவது கட்டாயமாகும். பாடசாலை பிள்ளைகளுக்கு சீருடை வழங்குவதன் ஊடாக நடைப்பெற்ற மக்கள் பணம் வீணாக்கப்படுவதை தடுப்பதற்காக சீருடைப் பற்றுச்சீட்டு வழங்குவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்ளும்போது சில தொழிற்சங்கங்களும் சீருடைப் பற்றுச்சீட்டு வழங்குவது தொடர்பில் எம்மை விமர்சித்தார்கள். எனினும் அதனூடாக அரசாங்கத்திற்கு அதிகப்படியான பணம் மீதப்பட்டதுடன் சீருடையை வழங்குவதற்காக மாணவர்களுக்கு வழங்கும் பற்றுச்சீட்டின் பெறுமதியையும் அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதென தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நேற்று (30) ம் திகதி நடைப்பெற்ற
தனியார் கல்வி நிறுவனங்களின் ஏழாவது சம்மேளனம் கௌரவ அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றபோது மேற்கண்ட கருத்தினை அமைச்சர் கூறினார்.
தமது பிள்ளைகளுக்கு எவ்வகையிலாவது நல்ல கல்வியை வழங்குவதற்கு அனைத்து பெற்றோர்களும் விரும்புகின்ற போதிலும் அதற்காக தனியார் கல்வி நிறுவனங்கள் காட்டும் அக்கறை மதிக்கும்படியாக உள்ளதென கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அங்கு தெரிவித்தார். பாடசாலை நடைபெறும் காலங்களில் தனியார் வகுப்பறை நடத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் நல்லெண்ணம் மிக்க பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது அதிகமாகப் பேசப்படுகின்ற ஹம்பந்தோட்டை துறைமுகத்தினை குத்தகைக்கு விடப்பட்ட விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டிற்கு இலாபத்தை ஈட்டி தருவதற்கான கூட்டு வியாபாரத்தினை ஏற்படுத்தி தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேலும் மக்கள் மீது அதிக வரியை சுமக்கும்படியான ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நடாத்திச்செல்வதற்கு பதிலாக அதனை குத்தகைக்கு விட்டதும், கடந்த அரசாங்கத்தினால் விற்கப்பட்ட கொழும்பு போட் சிட்டி திட்டத்தை குத்தகை ஒப்பந்தத்தின் ஊடாக மீண்டும் நடாத்திச்செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதும் மக்கள் நலனுக்காகவே என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
காலமுழுவதும் ஆசிரியர் சேவையை மேற்கொண்டவர்களை கௌரவிக்கும்படியாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டதுடன் இவ்விழாவில் வடமாகாண ஆளுநர் திரு. ரெஜினோல்ட் குரே அவர்களுடன் பலரும் கலந்துகொண்டனர்.