நகர்ப்புறங்களில் அமைந்துள்ள வசதிகளுடன் கூடிய பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்காக பல காலமாக நாடுமுழுவதும் காணப்பட்ட தீரக்கப்படாத பிரச்சனைக்கு நியாயமாகவும் நடைமுறைத் தீர்வாகவும் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் கருத்திற்கமைய அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நாடு முழுவதும் (ளுஅயசவ ஊடயளள சுழழஅ) வசதிகளுடன் கூடிய பாடசாலைகளாக அமைக்கப்பட்டு வருவதுடன் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் அதிக மக்கட்தொகையுடைய மாவட்டத்தை மையப்படுத்தி வசதிகள் நிறைந்த தேசிய பாடசாலையை புதிதாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நல்லெண்ண அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
இதன் முதல்கட்ட நடவடிக்கையாக அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்திற்கமைவாக குருநாகலை மகுருஒயவத்தயில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய தேசிய பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் தேசிய வைபவம் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் செப்டெம்பர் 2ம் திகதி நடைபெறவுள்ளது.