மத்திய கலாச்சார நிதியத்தின் முன்னேற்ற ஆய்வு அமர்வுக் கூட்டம் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நேற்று (07) ம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் விலை மதிப்பில்லா பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் பாரிய பொறுப்பு தொல்பொருள் திணைக்களத்திற்கும், மத்திய கலாச்சார நிதியத்திற்கும் உள்ளதாகவும் அத்தகைய கடமையைச் செய்யும்பொழுது அந்நிறுவனங்கள் சரியானதொரு ஒருங்கிணைப்புடன் செயல்படவேண்டியது அவசியமாகும் என்றார்.
இந்நாட்டில் மேலும் முக்கிய சில இடங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்காக தாம் அதன் செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்தார். அத்துடன் அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வையும் பெற்றுக்கொடுத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. சுனில் ஹெட்டிஆராச்சி அவர்கள், மேலதிக செயலாளர் திரு. அசோக சிறிவர்தன அவர்கள், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாந்த மண்டாவல அவர்கள், மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாந்த குணவர்தன அவர்கள் மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.