தற்போது பிள்ளைகளின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தலையிட்டு தென் கொரியா க்வென்ஜூ மொட்ரோபொலிட்டன் கல்வி திணைக்களத்தின் உதவியுடன் கடந்த வருடத்தில் இந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு கணணி வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பாடசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள கணணி தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த (17) ம் திகதி கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன் தென் கொரியா க்வென்ஜூ மொட்ரோபொலிட்டன் கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகளும் பாடசாலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டனர். தென் கொரியா க்வென்ஜூ மொட்ரோபொலிட்டன் கல்வித் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சுக்குமிடையே
ஏற்படுத்தப்பட்டுள்ள ஓப்பந்தத்தின் ஊடாக இலங்கை கல்விப் பிரிவு வளர்ச்சியடைவதற்கு பல கல்வி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அந்த ஓப்பந்தத்தின்படி கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் முன்னிலையில் 2016 ம் வருடத்திற்காக மேற்படி கணணிகள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் க்வென்ஜூ மொட்ரோபொலிட்டன் கல்வித் திணைக்களத்தின் பிரதான நிர்வாகப் பணிப்பாளர் திரு. லீ ஹொன்க் வே, பிரதான மேற்பார்வையாளர் திரு. சோ ஜுன்க் ஹய்யுன், குழுத் தலைவர் திரு. கிம் கய்யுன்க் ஜின், குழுத் தலைவர் திரு. லீ வென் டோ மற்றும் இணைப்பாளர் மென் ஜுன் ஹய்கொன்க் மற்றும் கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கிளையின் கல்விப் பணிப்பாளர் திரு. பி. என். அயிலப்பெரும மற்றும் இணை கல்விப் பணிப்பாளர் திருமதி. உதாரா திக்கும்புர மற்றும் பல அதிகாரிகளும் உடனிருந்தனர்.