புத்தகங்கள் கொள்வனவு செய்வதனை கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சில் விசேட வேலைத்திட்டம்.
3,312 பாடசாலை நூலகங்களுக்கு தேவையான வாசிப்பு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான 700 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு கடந்த நாட்களில் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைப்பெற்றது. பாடசாலை நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் பெயர்களும் அன்றைய தினம் முன்வைக்கப்பட்டது.
தற்போது அதிபர் மற்றும் பாடசாலை நூலக குழுவினர் தமது பாடசாலைக்கு தேவையான வாசிப்பு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதிபர் ஊடாக அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் புத்தகங்கள் மற்றும் அதற்கான கொடுப்பனவு குறித்து மீள் பரிசீலனை செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அறிவுறுத்தலின்படி பிள்ளைகளின் கைககளில் பரிந்துரைக்கப்பட்ட நூல்கள் மட்டுமே காணப்படுகின்றதா மற்றும் சரியான முறையில் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா போன்றவற்றை கண்காணிப்பதற்கும் மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.