பாடசாலை மாணவர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் பாடசாலைச் சீறுடை வவுச்சர்களை கையளிக்காமல் அதற்கு பதிலாக துணியாகவோ அல்லது வேறு மார்க்கங்களை மேற்கொள்ளும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இன்று வெளியாகிய சில பத்திரிக்கை அறிக்கைகளை மேற்கோள்காட்டிய கல்வி அமைச்சர் சில கல்வி வலையங்களில் வவுச்சருக்குப் பதிலாக துணிகள் வழங்கப்பட்டன என்றும் சீறுடை வவுச்சர்களை வியாபாரிகளுக்குள்ள தீர்வின் ஊடாக பாடசாலை அபிவிருத்தி சங்க முத்திரைகளை பதிப்பது குறித்த அறிக்கைகள் கிடைக்கப்பட்டுள்ளது.
அதிபர்களின் பொறுப்பு சீறுடை துணி வவுச்சர்களைக் கொண்டு மாணவர்கள் தாம் விரும்பும் கடைகளுக்குச் சென்று கொள்வனவு செய்யக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுப்பதேயாகும். வியாபார நிலையங்களை ஊக்குவிப்பதோ அல்லது கொள்வனவு செய்வதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கோ அதிபர்களுக்கு அதிகாரம் கிடையாது எனவும் அவ்வாறான செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது உறுதி.