“எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்காக குருநாகலை மாவட்டத்தின் வெற்றி நிச்சயம்” - ஐக்கிய தேசிய கட்சியின் இணைப் பொதுச்செயலாளரும், குருநாகலை மாவட்ட தலைவரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்காக குருநாகலை மாவட்டத்தின் நிச்சயமான வெற்றியை உறுதி செய்வதாக கட்சியின் இணைப் பொதுச்செயலாளரும், குருநாகலை மாவட்ட தலைவரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக உள்ளுராட்சி மன்ற சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தச்சென்ற வேளையிலேயே மேற்கண்ட தகவல்களை அவர் தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகூடிய வெற்றியை பெற்றதுபோல் இம்முறை தேர்தலிலும் வெற்றி நிச்சயமென அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவித்தார். மேலும் தற்போதைய அரசாங்கம் மக்களுக்காக பொறுப்புடன் செயல்படுவதாகவும், அதன் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னோக்கி கொண்டுசென்றிட அரசு அதன் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.