ஐந்து விநாடிகளில் 2000 நீர் ரொக்கெட்டுகளை பறக்க விட்டு கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் கிண்ணஸ் சாதனையைப் படைத்துள்ளார்கள். சீனாவில் 2013 ம் ஆண்டு (Kung Yik She Secondary School (China) in Tin Shui Wai, Hong Kong, China ) குங் யிக் ]P இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்களால் ஐந்து விநாடிகளில் 1056 நீர் ரொக்கெட்டுகளை பறக்க விட்டு படைத்த கிண்ணஸ் சாதனையை, றோயல் கல்லூரி மாணவர்கள் 2017-11-10 ம் திகதியன்று முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்கள்.
கிண்ணஸ் சாதனைச் சான்றிதழை 15 ம் திகதி கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. கௌரவ கல்வி அமைச்சர் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரியில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவின் போது மேற்படி வைபவம் நடைப்பெற்றது.
கல்லூரியின் விண்வெளி மற்றும் நட்சத்திர அறிவியல் சங்கத்தின் 50 வது ஆண்டு விழாவும், உலக அறிவியல் தின கொண்டாட்டத்துடன், இந்த நீர் ரொக்கெட்டுகளை பறக்க விடுதலும் நடைப்பெற்றதுடன் நீர் ரொக்கெட்டுகளை பறக்க விட்டதன் ஊடாக இலங்கை முதல் தடவையாக கிண்ணஸ் சாதனைப் படைத்துள்ளது.
விஞ்ஞானத்தையும், தொழிற்நுட்பத்தையும் புதிய பரிசோதனைக்குட்படுத்தி வெற்றியீட்டிய ஆக்கப்பூர்வமான மாணவர்கள் பாடசாலை மட்டத்தில் உருவாக்கப்படுவது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும், அதற்காக கல்வித் துறையில் சிறப்பான அறிமுகப்படுத்தலும் கொள்கையுடன் கூடிய பல செயல்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். மேலும் நாட்டின் பெயரை சர்வதேசத்திற்கு கொண்டுச் சென்ற புதிய திறமையுடன் முன்னோக்கிச் செல்லும் சிறந்த மாணவர்கள் நாட்டின் வளம் போன்றவர்கள் எனக் குறிப்பிட்ட அமைச்சர் கிண்ணஸ் சாதனைப் படைத்த றோயல் கல்லூரி மாணவர்களின் திறமைக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.