பிந்திய செய்திகள்

குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகள் தேர்ந்தெடுக்க முடியாமல் போனமைக்கு மாகாண அரசியல்வாதிகள் பொறுப்பு

 கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
 
 
ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் தென்னை ஓலைகளினால் ஆன குறைந்த வசதிகளை கொண்ட இடங்களில் கல்வி பயிலும் கவலையான செய்தி தனக்கு கிடைக்கபெற்றது. இவ்வாறான நிலைமைக்கு மாகாண சபை அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக குறைந்த வசதிகளை கொண்ட பாடசாலைகளை வசதிகள் கொண்டதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டத்;துக்கு பாடசாலைகளை தேர்தெடுக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்வளவு விதிகளின் அடிப்படையில் பாடசாலைகள் தேர்தெடுக்கப்பட்டன.
எனினும் ஒரு சில பிரதேச அரசியல்வாதிகளின் தலையீட்டினால் தேர்வளவு விதிமுறை ; மீறப்பட்டமையினால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது கவலைக்குரிய நிலைமையாகும்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர்களிடம் அறிக்கை கோரியுள்ளேன். இந்த நிலைமை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
(இதற்கான காணொளி, புகைப்படம் மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளன)
 

Search