கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு இலட்ச கணக்கான மக்களை கொழும்பு அழைத்து வந்து வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அடுத்து நடத்தப்படவுள்ள தேசிய தேர்தலை வெற்றிக்கொள்ளும் வகையில் இம்முறை மே தின பேரணியும் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறிகொத்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. மே தினத்திற்கு பின்னர் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறிகொத்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.
அத்துடன் மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஆரம்பிக்கவுள்ள மெகா கூட்டணியை பிரகடணப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட விரும்பும் கட்சிகளுடன் இணைந்து அடுத்த தேசிய தேர்தலை வெற்றிக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.