பிந்திய செய்திகள்

சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்றாலும் பெறாவிட்டாலும் எந்த மாணவர்களையும் கல்வி கட்டமைப்பில் இருந்து நீக்கமாட்டோம்.

க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள் - கல்வி அமைச்சர் 
பல்வேறு திறமைகள் இருந்த போதிலும் சாதாரண பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்கள் எதிர்காலத்தை வெற்றிக்கொள்ளும் வகையில் கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 13 வருட தொடர் கல்வி திட்டத்தின் கீழ் தொழில் பிரவேசத்துக்கான 26 பாடதுறைகள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதன்படி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றாலும் பெறாவிட்டாலும் எதிர்காலத்தை வெற்றிக்கொள்ளும் வகையில் தொழில் வாய்ப்புகளை கொண்ட உலகை வெற்றிக்கொள்வதற்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இனிமேலும் சாதாரண தர பரீட்சை போட்டி தன்மையுடன் கூடியதாக இருக்காது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மேலும் இம்முறை க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் தோற்றிய  75 சதவீதமானோர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

Search